உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

|-

அப்பாத்துரையம் - 29

புது விடுதலையுணர்வுடன் புது வாழ்வார்வத்தோடு இயங்கச் செய்கின்றன.

சிந்தனை, அறிவு, உள்ளுணர்வு

எந்தச் சூழலும் தன்னியல்பில் கடுமையுடையதன்று. சிக்க லுடையதன்று. சூழலின் சிக்கலை உயிர்ப்பண்புடன், உள்ளுணர் வுடன் காணும் ஆற்றல் இல்லாத் தன்மையே கடுமையாக இயல்கிறது. சிக்கலை விடுவிக்கும் உள்ளுணர்வின்மையே சிக்கலாகக் காட்சியளிக்கிறது. தன்னடக்கமுடையவன், பொறுமையுடையவனிடம் இச் சிக்கல் சிந்தனையைத் தூண்ட உள்ளுணர்வு செயலாற்றுகிறது. அது சிக்கலகற்றப் புது வழி நாடுகிறது. புது வழி புதுமையார்வமாகிய உயிரார்வம் எழுப்பு கிறது.

ம்

சிக்கல் அகன்றுவிட்ட பின், உயிர் மீண்டும் எளிய பாதையில் செல்கிறது. இது உள்ளுணர்வின் வழி செயலாற்றும் அறிவுப்பாதை, ஆனால் உள்ளுணர்வுப்பாதை அன்று. னெனில் உள்ளுணர்வு சிந்தனையைத் தூண்டும் உயிரறிவு. அதன் பயன், சிந்தனையின் பயனே அறிவு. இந்தப் பொதுநிலை அறிவு தான் சென்ற வழியேதான் செல்லும்; ஏனெனில் அது இயந்திரம் போன்றது. சிந்தனையில்லாத இந்த அறிவு சிந்தனையறிவின் பயன், சிந்தனையன்று. உள்ளத்தின் முழு ஆற்றலையும் அது ஈடுபடுத்துவதில்லை. அதன் பெரும் பகுதியைச் செயற்படாமல் தூங்க வைத்து, ஒரு சிறு பகுதியை மட்டும் செயற்பட வைக்கிறது. செயற்படும் இப்பகுதி இயங்குவதை இயங்கும் திசையில் இயங்க வைக்கும் ஆற்றல் மட்டுமே உடையது. சூழலுக்கிசைய நெறியமைத்துப் புதுநெறி காணும் ஆற்றல் அதற்குக் கிடையாது.இவ்வாற்றல் சிந்தனைக்கு, மெய்யுணர்வுக்கு மட்டுமே உண்டு. அது மறுபடியும் இடர்வந்த போதன்றிச் செயலாற்றாது. இடர்வந்த போதும் அதில் தளராது எதிர்த்து நிற்கும் உயிர் ஆற்றல் உடையவரிடத்தில் மட்டுமே அது செயலாற்றும்.

இடர்கள் தாமாக, தற்செயலாக எழுந்து விடுவதில்லை. அவற்றுக்கும் ஒரு முறை உண்டு, ஒரு காரணம் அல்லது தூண்டுதல் உண்டு. வாழ்வின் உயிர் மலர்ச்சியையே அது முறையாக, நெறியாகக் கொண்டது - அதையே காரணமாக