உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

59

தடமற்ற வழியல்ல. அது ஆன்றோரின் நேரான பைந்தடங்கள் பதிந்தது நன்கு துவைந்த சுவடுகளுடையது. அது சேற்றுக் குட்டைக்கோ, முட்காட்டுக்கோ இட்டுச் செல்வதில்லை. அவை கடந்து அவற்றின் வழியாகக் கூடச் செல்வதில்லை. அது பசுங்கழனிகளினூடாக, பகலொளியில் நெடுந்தொலைவி லிருந்தே காணக்கூடும் பளபளப்பான சலவைக்கல் மாளிகை களும்கூட கோபுரங்களும் நிரம்பிய மாநகருக்குச் செல்வது - அந்த மாநகரமே இன்பம், இனநலம், முழுநிறை வெற்றி!

சிந்தனைப் படிகள் - பண்புகள்

இடையூற்றில் சிக்கியபின் அதினின்றும் மீள விரையாமல் அங்கேயே குந்திக் கொண்டு அழுபவன் நேர்வழியில் விரைய வேண்டும். அரிய நேரத்தை வீணாக்குகிறான். அது மட்டுமன்று, அவன் இடரின் படிப்பினையையும் பெறாது போகிறான் - தூங்கிக் கிடக்கும் உயிராற்றல்களைத் தட்டி எழுப்பி வளர்க்கும் அதன் அரிய வாய்ப்பையும் இழந்து விடுகிறான். இடர்மேல் டர்மேல் இடரை அவன் வரவழைக்கிறான். தன்னை விலங்கு நிலைக்கு இழிவுபடுத்திக் கொள்கிறான். ஏனென்றால் உடலளவில் விலங்குகளில் ஒரு விலங்காகவேயுள்ள மனிதனை அவ்விலங்கு நிலையிலிருந்தும் உயர்த்துவது சிந்தனையாற்றல் ஒன்றே.

இயல்பாகச் சிந்தனையுடையவன் முன்னறிவுடையவன், மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்பவன் அவனே. சிக்கல்களில் மாட்டியபின் சிந்திப்பவன் அறிவுடையவன். அவன் ஓயாது சிந்திக்காவிட்டாலும் அடிக்கடி சிந்தனையால் தூண்டப்படும் அறிவுடையவன். சிக்கல்வந்த பின்னும் சிந்திக் காதவன் அறிவிருந்தும் அதை இழப்பவன், அதை உயர் அறிவாகப் பேணி வளர்க்காதவன் அல்லது அறிவற்றவன் ஆகிறான். அவன் நிலை மனித நிலையிலிருந்து உயர் விலங்கு நிலைக்கும், உயர் விலங்கு நிலையிலிருந்து கீழின விலங்கு நிலைக்கும் படிப்படியாக இழிகின்றது.

தன்னடக்கம், தன்னுணர்வு, விழிப்புடைமை, முன்கருதல், ஆய்வமைதி, சிந்தனை - இவை இடர்கள், சிக்கல்கள் அகற்றத் தேவைப்படுகின்றன. வளமான வாழ்வில் அவையே அப் பண்புகளை வளர்க்கின்றன. சிக்கல்களையும் இடர்களையும் இவ்வகையில் சரிவரப் பயன்படுத்தியவன் தன்னை முற்றிலும்