உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 29

குரிய பிறப்புத் துன்பமாகவே அமையவல்லது. அம்மனிதன் அச்சமயம் அத்துன்பத்தையன்றி வேறெதுவும் நினைக்கா விட்டாலும், உண்மையில் அத்துன்பத்தினும் இன்பம் பொதிந்த மறையுணர்வு வேறில்லை என்னலாம். சிந்தனையற்ற செடிகொடி வாழ்வின்நிலை, தற்சிந்தனையற்ற விலங்குநிலை, தற்காலிக வாழ்வு கடந்து சிந்திக்காத மனித நிலை ஆகிய படிகள் கடந்துவிட்டன; உயர் தெய்வீகப் படிக்கு அம்மனிதன் மேம்படத் தொடங்கி விட்டான் என்பதற்கு இக்குழப்பமே ஒரு புரட்சிகரமான அறிகுறி ஆகும்.

இனி அவன் நிலமீது தவழாது பறந்து, தன் மலர்ச்சிக்குத் தானே தன்னைத் தூண்டும் நிலை பெறுவது உறுதி. பாதி விலங்கு, பாதி மனிதப் பண்புடைய மனிதப்படி கடந்து முழு மனிதப்படி, அஃதாவது தெய்வப்படியில் அவன் வாழத் தொடங்கி விட்டான். உள்ளத்தின் எல்லையற்ற ஆற்றலையெல்லாம் சின்னஞ்சிறு புறச் செய்திகளில் சிதறவிடும் நிலைமாறி, அவ்வுள்ளத்தின் ஆற்றலை உணர்வதிலேயே அவன் அவற்றை இதுமுதல் செலவிடத் தொடங்குகிறான் என்னலாம்.

6

வாழ்க்கையின் எல்லாப் புதிர்களுக்கும் - சமயவாதிகள், ஞானிகள், அறிவர் உள்ளங்களையே குழப்பிய உயிர்ப்புதிர் களுக்கும் - இனி அவன் விடை காண்பது உறுதி. இப்புதிர்களே மெய்யுணர்வுக் கோயிலின் வாயில்காப்போராகிய வாய்மைத் திறங்கள்.

இப்புதிர்களுக்கு விடை காண்பவரே அவ்வாயில் கடந்து செல்லுதற்குரியோர் ஆவர்.

46

'ஆடரிடர்கள் வரும்போது, அவை சென்றணையான், விலகிச் செல்லாது அமைதியுடன் அமர்புரிவான் அவனே அருமெய்ம்மைக் கோயிலுக்குள் நுழை தகுதி உடையோன்!'