உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 29

நிலையையும் அடைவதில்லை. எப்போதும் எப்போதும் சிந்தித்து, எப்போதும் அமைதியிழவாது நிலவும் நிலையே அவன் நிலை.

கேள்விகள் அவன் உள்ளத்தில் ஓயாது எழுந்து கொண்டே யிருக்கும். ஆனால் அக்கேள்விகளுக்கு விடை காண விரும்பாமல் அவன் ஒளிப்பதுமில்லை. விடைகாணத் தத்தளிப்பதுமில்லை. கேள்வி எழுந்தால் விடை தோன்றுவது உறுதி என்ற நம்பிக்கை யுடன் அவன் மெய்யறிவொளியில் விடையை நாடிக் கொண்டே யிருப்பான்.

அறிவு உடலாகவும் அமைதி உயிராகவும் கொண்ட தெய்வ உரு அவன் விழிப்படைந்த உள்ளத்தில் ஓயாது அறிதுயில் கொள்கின்றது. அது கனவு நிலையில் அவனுக்குப் புதுப்புது மெய்ம்மைகளை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

மெய்யுணர்வுநிலையே மீளாஉயிர் இன்பநிலை

இக்கனவுநிலை அல்லது அறிதுயில் நிலையிலிருந்து அவன் விழிக்க முயல்வதேயில்லை. ஏனெனில் அவன் விழிக்கும் சமயம் அவன் கண்கள் திரும்பத் துயில வேண்டாத நிறையின்பப் பேரொளிமீதே தவழும். பிறவா நிலை, இறவா நிலை என்று சமயவாணர் குறித்தநிலை இதுவே.

மெய்யுணர்வு நிலை யடைந்த இத்தகைய மனிதன் தன் உயர் அவாக்களை, உயர்தளத் திட்டங்களை என்றும் தாலாட்டி உறங்கவிடுவதில்லை. அவை அவன் உள்ளத்தளத்தில் விழிப்புற்ற நாள்முதல் அவன் மெய்யுணர்வொளியில் ஓயாது கனிவுற்றுச் செயல்நிறைவு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும். ஓயாது சிக்கல்களகற்ற, இடர்கள் நீக்க முயன்றுகொண்டே இருக்கும். ஏனெனில் மெய்யுணர்வு என்பது அவன் தனி உயிரை, தனி உள்ளத்தை எப்போதும் அகல் உலகப் பொது உயிருடன், மனித இனப் பொது உள்ளத்துடன் இணைத்தே நிற்கும்.

தான் காணும் இன்பம் உலகு காணும்வரை, தன் கனவு உலகக் கனவாய், தன் செயல் மனித இனத்தின் செயலாகும்வரை அவன் அறிவுகடந்த அமைதிநிலை பெற முடியாது. ஆகவே அவ்வறிவு எல்லையற்ற இன்ப நோக்கி இடையறாது செயலாற்றிக் கொண்டே இருக்கும். பிறப்பால் மனிதனானாலும், தன்மையால் அவன் பிறப்பு இறப்பற்ற கடவுட் கூறாய் இயங்கத்