உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

71

அங்கமெலாம் நோகிறாயே! அதுமட்டுமோ? சுமையைத்தான் சுமக்கிறாய்! இடையிடையே சுமைதாங்கியில் இறக்கி வைத்து இளைப்பாறியாவது செல்லப்படாதா, அப்பனே? கடுவெயி லிலும் இளைப்பாறாமல் சுமக்கிறாய்! வெயிலின் வெப்பால் சுமையும் வெப்பேறி உன் முதுகு கொப்புளிக்கிறதே! அந்த வேதனையும் தாங்க வேண்டுமா? மழை பெய்யும் போதாவது ஓய்வு கொள்ளாமல், மழையில் நீயும் நனைந்து, சுமையையும் நனையவிட்டு, உன் சுமையுடன் மழையின் சுமையையும் தூக்கிச் சுமக்க வேண்டுமா?

எத்தனை நாள் உன் சுமைக்கு மட்டுமன்றி உன் அறியாமைக்கும், அறியாக் கண்மூடிப் பிடிவாதத்துக்கும் ஆட்பட்டு அழிமதிக்கு உள்ளாகப் போகிறாய்?

அப்பாவிப் பிரயாணியே! பயனுடைய சுமையை அதன் பயன் நாடிச் சிறிது நேரம், சிறிது தூரம் தூக்கிச் செல்வர். நீயோ பயனற்ற சுமையை என்றும், எங்கும், இடைவிடாது எல்லை யின்றிச் சுமந்து செல்கிறாய்! உன் செயலில் நீதியில்லை, நியாய மில்லை காரணகாரியப் பொருத்தம் இல்லை! அறிவில்லை, உணர்வில்லை - உணர்ச்சியுமில்லை!

-

உன் துன்பம் காண்பவர்க்கு இரக்கமாயிருக்கிறது. ஆனால் உனக்கு உன்மீதே இரக்கம் இல்லையா? பிறர்மீது இரங்காதவர் கூடத் தன்மீது இரங்குவார்களே? உனக்குத் தன்னிரக்கம்கூடக் கிடையாதா?

உலகை இன்பமயமாகக் காண்பதற்கு ஒரு முதற்படியாக நீயாவது உன் சுமையையும் துயரத்தையும் ஒருங்கே இறக்கி வைத்துவிட்டு உலவக் கூடாதா?

மாயச்சுமையின் சுமைமாயம்

புறஉலகில் சுமை என்பது இன்றியமையாப் பயனுடைய, அவசியமான பொருளைத் தூக்கிச் செல்வதற்குரிய பெயரே யாகும். ஆனால் அஃது ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு குறிப்பிட்ட தூரம், அதுவும் இடை டை ஓய்வுடன் கொண்டு செல்லும் பொரு ளாகவே அமையும். கொண்டு செல்லும் சுமைகலம் கிடைத்தால் யாரும் அதைத் தாமே கொண்டு செல்வதில்லை. சுமை கலத்தில் அனுப்புவர் அல்லது செல்கலத்தில் தம்முடனே கொண்டு