உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

49

தன் கலைத்திறம் முழுதும் காட்டித் திருத்திக் கொண்டாள். பின் அவள் தன் தோழியிடம் “திரும்ப ஒப்பனையறை செல்லாமலே மண்டபம் செல்ல வழியுண்டா பார். எப்படியாவது நாம் உடனே அங்கே சென்றுவிட வேண்டும்” என்றாள்.

தோழி நல்லகாலமாக இம்மாளிகையில் பலதடவை பணியாளாக வந்து பழகியவள். புறமேடை ஒன்றில் எப்படி யாவது நுழைந்து விட்டால், அதிலிருந்து அங்குள்ள மறைவழி களுள் ஒன்றின் மூலம் கீழே செல்ல முடியும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், கோமாட்டியாகிய தன் தலைவியைப் பலகணியேறித் தாவச் சொல்ல முடியாதே என்று அவள் தயங்கினாள். மாது சிராம்மோன் அவள் குறிப்புணர்ந்து "பெண்ணே! நீ ஒன்றும் தயங்க வேண்டாம். இந்தப் பொல்லாத பிடாரிகளிடமிருந்து தப்ப, கூற்றுவன் உலகுக்குத் தாவவும் நான் தயங்கமாட்டேன" என்றாள்.

இருவரும் பலகணி ஒன்றில் ஏறித்தாவிப் புறமேடை, பெரும்பாலும் முடியிருக்கும் இருட்டறைகள், மறைபாதைகள், இடைவழிகள் ஆகியவற்றினூடாகச் சுற்றிச் சுற்றிச் சென்று மண்டபமடைந்தனர். அவர்களைக் கண்ட பின்னரே சிராம்மோன் மூச்சு வாங்கினார். எங்கே பிளான்ஸி - பெரோன்மாயப் பசப்புத் தன் புது மணத் துணைவியைப் பட்டுச் சிறைவைத்து விழாவைக் கொடுத்துவிடுகிறதோ என்று அவர் அஞ்சினார்.

மாது சிராம்மோன் ஏதோ காற்றுவாங்கப் போயிருக்கிறாள் என்று பேசாதமைந்திருந்த 'பிடாரிகள்' சிறிது நேரம் சென்று அவளைத் தேடிக் காணாமல் வியப்புற்றனர். வியப்புற்றனர். 'எங்கே போயிருப்பாள்! தன் ஆத்திரம் பொறுக்காமல் பலகணியிலிருந்து குதித்திருப்பாளோ? அப்படி குதித்திருந்தால் எவ்வளவோ நல்லதுதான். ஆனால், அத்தகைய முடிவு ஏற்பட்டதாக நம்ப முடிய வில்லையே. எல்லாம் அமைதியாயிருக்கிறதே' என்று எண்ண மிடலாயினர். அதனிடையே மணமகள் மண்டப மடைந்தாள் என்ற கசப்பான செய்தியைக் கேட்டு அவர்கள் விம்மிப் பொறுமினர். ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.