உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

7

அவள் கூறினாள். இது, உண்மையில் ஒரு மயிலின் வருணனையே ஆகும்.

நிலத்தையும் கடலையும் ஒரே தாவாகத் தாவி வரிசை வரிசையாகச் செல்லும் வெண்மீன்களின் அழகை அவள் புகழ்ந்தாள். இவ் வெண்மீன்கள் உண்மையில் நாரை கொக்கு வகைகளே.

இந்த ஆர்வக் கதைகளைக் கேட்ட தங்கையர் ஐவரும் தம் தம் கட்டிளமை நாள் என்று வருமோ என்று அதையே எண்ணி எண்ணி ஏங்கினார்கள்.

சீமாட்டி, திருவாட்டி, மால்விழி, வேல்விழி, ஆகிய நங்கையர் கட்டிளமை விழாக்களும் இவ்வாறே வந்துவந்து சென்றன. ஒவ்வொருவரும் விழாநாளை ஆவலுடன் எதிர் பார்த்தனர். அந்நாளையும் அதனையடுத்த சில நாட்களையும் ஒவ்வொருவரும் ஆர்வத்துடிப்புடனேயே கழித்தனர். தம் இளைய நங்கையர்களிடம் தாம் கண்ட புதுமைகளைக் கூறி அவர்கள் ஆவலைத் தூண்டவும் அவர்கள் தவறவில்லை. ஆயினும் புதுமையார்வம் ஒரு சில நாட்களுக்குள் அனைவரிடமும் ஒய்ந்துவிட்டன. கடற்பரப்பிலும், நிலப்பரப்பிலும் உள்ள அக்கரையை ஒவ்வொருவராகக் கைவிட்டனர். ஆழ்கடலின் பழைய சூழலுக்குள்ளேயே அவர்கள் மீண்டும் இழைந்தனர்.

வேல்விழியின் ஆர்வம் இந்த ஐந்து ஆண்டுகளிலும் வளர்ந்தே வந்தது. ஆர்வம் ஆறிய தமக்கையரிடம் அவள் அதைக் காட்ட விரும்பவில்லை. ஆனால், அவள் கண்கள் அவள் நிலையை அவர்களுக்கு நன்கு விளக்கின. அவை, முன்னிருப்பவற்றைப் பார்க்கவில்லை. எப்போதும் கடற்பரப்பையும் வானையும் நிலத்தையுமே கனவு கண்டன. பொறுமையாக அவள் ஒவ்வொரு வரிடமிருந்தும் மனிதர், கப்பல்கள், நிலவுலக வாழ்க்கை ஆகியவை பற்றிய செய்திகளைக் கேட்டு உள்ளத்தில் சேகரித்து வந்தாள்.“கடல் மக்கள், நிலவுலக மக்களுடன் ஊடாட முடியுமா? நில உலக மக்களாக வாழ வழியுண்டா?" இத்தகைய கேள்விகளை அவள் மெல்ல அத்தை பொன்னாவிரையிடமும் பிற தோழி யரிடமும் கேட்டாள்."முடியாது" என்றனர் சிலர்."இன்பகரமான கடல்வாழ்வைவிட்டு அதை யார் நாடுவார்கள்?” என்றனர் வேறு

பலர்.