உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

-

அப்பாத்துரையம் - 32

மக்களுலகின் துணிச்சலை அவள் பாராட்டினாள். தன் உருவைக் காட்டிக் கொள்ளாமலே, மிதக்கும் கட்டைகளை அவள் தத்தளிக்கும் மனிதரருகே தள்ளினாள். ஆவளால் அப்போது செய்யமுடிந்த உதவி அவ்வளவே. அவர்கள் மட்டும் கடல் மக்களாயிருந்தால், அவள் அத்தனை பேரையும் கடலடியிலுள்ள தன் தந்தை மாளிகைக்கே கொண்டு சென்றிருப்பாள். ஆனால் அவர்கள் நிலவுலக மக்கள்; கடலுக்குள் கொண்டு சென்றால் அவர்கள் மூழ்கியே இறந்து விடுவார்கள்.

சூறாவளி - பெரிதும் அடங்கிற்று, கிழக்கில் வானம் பால் வார்க்கத் தொடங்கிற்று, அவளால் தள்ளப்பட்ட கட்டைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டே ஒரு மனித உருவம் மிதந்து தவழ்ந்தது. அதன் உடலில் உயிர் இருப்பதாகவே தோற்றவில்லை. பிடிமட்டும்தான் கட்டையைத் தொற்றிக் கொண்டிருந்தது. அவள் உள்ளம் இன்னதென்றறிய முடியா இயக்கத்தால் கனிவுற்றது. அவள் அந்த உருவத்தை அணைத்தெடுத்தாள். அந்தோ, அதுவே இளவரசன் செழுங்கோ!

அவள் துடித்தாள். அவள் உடல், அதன் இயற்கை நிறம் நீங்கி வெளிறிற்று.

அவள் அவ்வுடலைத் தூக்கினாள். அலைகள் மீது தாவித் தாவி கரையிருந்த திசை நாடி விரைந்தாள்.

நல்லகாலமாக அருகிலேயே ஒரு சிறு தீவு இருந்தது. அதன் கரை, பன்னிற மணல்களால் பாவப்பட்டிருந்தது. பொன்மணல் பரந்த ஒரு நுரையில் அவன் உடலைக் கிடத்தினாள். உடலில் சூடுபட ஆவலுடன் கைகளால் தேய்த்தாள். இளவரசன் உடலில் மெல்ல உணர்வு வந்தது. அவள் மகிழ்ந்தாள். அவள் உடலிலும் அப்போதுதான் உணர்வு வருவது போலிருந்தது. இளவரசன் மார்பு மெல்ல உயர்ந்துயர்ந்து தணிந்தது.

மூக்கு வழியே மூச்சுத் தடைபட்டுத் தடைபட்டு வரத் தொடங்கிற்று. இனி, அவன் விரைவில் விழித்துவிடுவான் என்று அவள் உணர்ந்தாள்.

கிழக்கு முற்றிலும் வெளுத்துவிட்டது. கடல் நங்கையான தால், வேல்விழி நெடுநேரம் கரையில் தங்க முடியவில்லை. அதே சமயம் செழுங்கோவை ஆதரவில்லாமல் விட்டுப் போகவும்