உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 32

கடற்காற்றில் அவள் நடுங்குவதாக எண்ணி, செழுங்கோ தன் சால்வையால் அவளைப் போர்த்தினான். ஆதரவுடன் அவளை அணைத்து அரண்மனைக்குக் கொண்டு சென்றான். அவளை அவன் வேற்றுமை இல்லாமலே நடத்தினான். நாளுக்கு நாள் திருகுவளையின் அழகை அவன் மறந்தான். அவள் அழகே அவ்வழகாக அவனுக்கு இன்பம் அளித்தது. ஆனால் திருகுவளை அவனுடன் பேசினாள். உள்ளத்துக்கு உள்ளம் பரிமாறினாள்.

வேல்விழியோ கண்விழியால் மட்டுமே பேசினாள். அப்பேச்சு அவள் கண்வழியே அவன் கண்ணில் பாய்ந்தது. கண்ணின் பேச்சுக்கு விரல்கள் விளக்கம் தந்தன. விரல்களுடன் விரல்கள் ஊடாடின. செழுங்கோவின் உடலும் உள்ளமும் மெல்ல மெல்ல அவள் பாசத்தில் இழைந்தது.

அடிக்கடி செழுங்கோவின் உள்ளம் கடலலைகளில் தவழும் ஒரு கடலணங்கின் மென்கரங்கள் தன்னை அணைப்பதாக அவன் உணர்வான். அச்சமயம் அவன் கைகள் வேல்விழியின் கைகளைத் தடவின. கடலலையில் இருந்து தன்னை மீட்ட கைகள் அவையாகவே இருக்க வேண்டுமென்று அவன் எண்ணுவான். அச்சமயங்களில் வேல்விழியில் உடலில் இனியதோர் உணர்ச்சி பாய்ந்து ஓடும்.

ஆனால், மற்றும் சில சமயங்களில் இளவரசன் உள்ளம் கடற்கரையில் உலவும்; அச்சமயம் வேறு ஓர் ஆர்வக் குரல் அவன் செவிகளுக்கு இசையமுதாய் ருந்தது. அவன் அவற்றைக் கேட்டவண்ணம், வேல்விழியின் இதழ்களை நோக்குவான். அவள் அவன் நோக்குக்கு எதிர்நோக்கி அவனை அணைப்பாள். ஆனால் இவள் உடல் இச்சமயம் அனலாய் எரியத் தொடங்கும். ளவரசன் உள்ளம் வேறொரு திசையில் சென்றிருந்தது என்பதை இச்சமயம் அவள் உணர்ந்தாள்.

வேல்விழியின் அழகைப் பாண்டியன் அரண்மனையில் போற்றாதார் யாருமில்லை. ஆனால் அவள் யார், எங்கிருந்து வந்தாள் என்பதை அவர்கள் அறியக் கூடவில்லை. அத்துடன் அவள் வாயாடா ஊமை என்ற செய்தியும் வெளிவந்தது. இளவரசன் அவளை மணக்கக் கூடாது. என்று பாண்டியர் குடிப் பெருமக்கள் வாதாடினர். இளவரசன் உள்ளத்திலும் பலவகை எண்ணங்கள், உணர்ச்சிகள் எழுந்து வாதாடின. இவையனைத்தும்