உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

23

வேல்விழியின் வாய்பேசா வாழ்த்துக் கிடைத்தபின் செழுங்கோவும் திருகுவளையும் மீண்டும் எல்லையிலா இன்பக்கடலுள் மூழ்கினர். அந்த இன்பத்துக்கு விலையாக, வேல் விழி செய்த தன்மறுப்பை அவர்கள் அன்று உணரவில்லை.

இளவரசன் விருப்பப்படி, கப்பல் புயலில் உடைபட்ட இடத்திலேயே, மற்றொரு கப்பலில் வைத்துத் திருமணம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. மணமக்கள் இரவிலேயே வேல்விழியுடன் கப்பலில் சென்று தங்கினர். வேல்விழி இன்பமே உருவாய் மணமகள் தோழியாகக் கப்பலில் அங்குமிங்கும் உலவினாள். ஆனால் அவள் உடல் உள்ளூர மின்சாரக் காந்த அழலில் பட்டுத் தத்தளித்தது. அதை அவள் வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.

கப்பலில் மணவிழாப் பாட்டுகள் யாழுடனும் குழலுடனும் இழைந்தன. அதே சமயம் அவற்றினும் மெல்லிய இனிய குரலுடன் அலைகள் கப்பலுக்கு வெளியே பாடின. அவை உண்மையில் கடல் நங்கையரின் சோகங்கலந்த பாடலே என்பதை வேல்விழி அறிந்தாள். அவள் மெல்லக் கப்பலின் பலகணி வழியே கடல்லைகளை நோக்கினாள்.

அப்போது நள்ளிரவு, காதலர்கள் கூட அயர்ந்து உறங்கினர். யாழொலியும் குழலொலியும் கூடத் தூங்கிசை பயின்றன. அந்த இசையுடன் இழைந்து பாடிய வண்ணம் வேல்விழியின் தமக்கையர் கடலலை முகட்டில் மிகுந்தனர். வேல்விழியைக் கண்டதும் அவர்கள் கப்பல் அருகே தாவி வந்தனர். வேல்விழியும் அலைகளில் குதித்து அவர்களை அணைத்துக் கொண்டாள். அவர்களும் அவளை மாறி மாறி அணைத்து வெதுவெதுப்புடைய தம் புத்தம் புதிய கண்ணீரால் அவளை நீராட்டினர்.

கோமாட்டி அவளை மடிமீது எடுத்து வைத்துக் கொண்டாள். மற்ற தமக்கையர்கள் சூழ்ந்து அலைகளிடையே தவழ்ந்து நின்றனர். கோமாட்டி கம்மிய குரலில் பேசினாள்.

“ஆரூயிர்த் தங்கையே, ளவரசனுக்காக நீ துறந்த இன்பங்கள் மிக மிகப் பெரியன. ஆனால் நீ இளவரசனிடம் வைத்த அன்பைவிட நாங்களும் அத்தையும் உன்னிடம் வைத்துள்ள அன்பு சிறிதன்று. இதை நீ இதுவரை அறிந்திருக்க முடியாது. நீ சென்றது முதல், அத்தையும் உன்னிடம் வைத்துள்ள