உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 32

பயன் பற்றிக் கவலைப் படாதே! கடவுள் உன்னைக் காக்கட்டும்" என்று அவன் பேசினான்.

அவன் பேச்சு முடியுமுன், கண்கள் மூடின. சிறுவன் இளஞ்சாத்தன் "அப்பா,அப்பா" என்று கூவினான். தந்தை பேசாதது கண்டு அவன் அலறினான். துடித்தான். ஆனால் விரைவில் தன் கடமை அவன் நினைவுக்கு வந்தது. அவன் சில உறவினர் உதவியை நாடினான். குடும்பக்கல்லறை மாடத்தில் தந்தையின் உடலை அடக்கம் செய்தான். கடைசி வாய் மொழியை நினைவுபடுத்திக் கொண்டான். அதன்படி நடப்பதாக அவன் வாக்குறுதி செய்தான். அன்புடன் தந்தை கல்லறைக்குப் பூசனைகள் நிகழத்தினான்.

தந்தை இறந்த பதினாறாவது நாள் அவன் கல்லறை மாடத்துக்குத் திருமெழுக்கிட்டான். கல்லறையைப் பலவாறு மலர்களால் அணி செய்தான். பற்றார்வத்துடன் பூசனை செய்து விடைபெற்றான். வெளிநாடு சென்று பொருள் தேட எண்ணிப் புறப்பட்டான்.

தந்தை செல்வத்தின் எச்சமிச்சமாக, அவனிடம் ஐம்பது பொன் காசுகளே இருந்தன. அவற்றை ஒரு பையிலிட்டு முடிந்து, அரைக் கச்சையில் கட்டிக் கொண்டான்.

அவனிடமுள்ள சிறுதொகையில்கூட, அவன் ஒவ்வொரு பொன்னாக எடுத்துச் சில்லரை மாற்றி வைத்துக் கொண்டான். தன்னால் இயன்ற மட்டும் ஏழை எளியவர்களுக்கு அதைக் கொடுத்து உதவினான். துணையற்ற நாடோடி விலங்குகளுக்கும் அவன் அவ்வப்போது தீனி வாங்கி உதவினான். பலவிடங்களில் ஏழைகளின் வீடுகள் கூரை அகன்றும், சுவர் இடிந்தும் கிடந்தன. அவன் கிடுகுகள் முடைந்து கூரைகளைச் செப்பம் செய்தான். மண்குழைத்துச் சுவர்களைத் திருத்தினான். ஏழைமக்கள் அவனை வாயார வாழ்த்தினார்கள்.

இரவு நேரங்களை அவன் அவ்வப்போது ஏழைகள் குடிசைகளில் கழித்தான். ஒவ்வொருநாள் அவன் மரத்தடிகளிலும் வைக்கோல் போர்களினடியிலும் தங்க வேண்டி வந்தது. ஆனால் அவன் இதுபற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. வானத்தைவிடச் சிறந்த கூரையை அவன் எதிர்பார்க்கவில்லை. வான்மீன்களே அவனுக்கு நல்ல துணைவர்களாயிருந்தன. காலையில்