உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

45

பண்புடைய வருக்கைக் கனியைக் கொடுத்தான். பாறையின் பிளவில் விளைந்து நீண்டநாள் முதிர்ந்தது அக்கனி. அது தெய்வீக ஆற்றல் உடையதாயிருந்தது. அதை உண்டால் அழுத கண்ணீர் முத்துக்களாகப் பொலிவுற்றன. சிரித்த சிரிப்பு மணிகளாகச் சிதறின. இச் சிறப்புக்களைக் கூறி அதைக் கவனமாகப் பக்குவம் செய்து உண்ணும்படி காடுகாவலன் வேண்டினான்.

பூணாரம் வழக்கப்படி அதை

இளவேனிலிடம் கொடுத்தான். அதைத் தனிப்படச் சமைத்துத் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் அளிக்கும்படி கோரினான்.

மையார்விழிக்கு வணிகன். செயலும் கட்டளையும் ரண்டுமே பிடிக்கவில்லை. ஆனால் கணவனைக் கடிந்து கொள்ள அவள் துணியவில்லை. எப்படியாவது அவர்களுக் கெதிராக அவனைத் தூண்டி அவர்களை ஒழிக்கக் கருதினாள். அன்றே அவளுக்கு அவ்வாய்ப்பும் கிட்டிற்று.

பொன்மணி இளைஞனாய் விட்டாலும் விளையாட்டுப் போக்கு மாறாதவன். அவன் ஒரு மணிப் புறாவைப் பறக்க விட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.

மணிப்புறா மையார் விழியின் மாடத்தினுள் சென்று தஞ்சம் புகுந்தது. அவள் அதை எடுத்துத் தன் மணப்பொருள் பேழைக்குள் ஒளித்து வைத்தாள். பொன்மணி கேட்டபோது அது தன்னிடம் இல்லை என்றாள். ஆனால் மணிப்புறா உள்ளே சென்றதை அவன் பார்த்திருந்ததால், அவள் சொல்வதைக் கேட்காமல் மாடத்தினுள் புகுந்தான். அவள் தடையை மீறி அறை முழுவதும் தேடி மணிப் புறாவைக் கண்டெடுத்தான். இம்முயற்சியில் மையார் விழியின் கைவளைகள் உடைந்தன. மணப்பொருள்கள் தாறுமாறாகச் சிதறுண்டன.

தன் மணிப்புறாவைப் பறித்துத் தன்னையும் புண்படுத்தி விட்டான் என்று அவனைப்பற்றிக் கணவனிடம் கூற மையார்விழி திட்டமிட்டாள். அவ்வாறு செய்து அவனையும், அவன் அண்ணனையும் அண்ணியையுமே வெளியேற்றிவிடுவதாகவும் அவள் அச்சுறுத்தினாள்.