உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

47

வழியாகவே அண்ணன் வரக்கூடும் என்று அவன் ஆற்றங்கரையில் சென்று அங்கே கிடந்த ஒரு கல்மீது அமர்ந்தான்.

பஞ்சணையில் கிடக்கவேண்டிய அண்ணி பருக்கைக் கற்களில் கிடந்தாள். தாதியர் சூழ்ந்து ஆரவாரிக்கத் தங்கத் தட்டிலே கிடக்க வேண்டிய அண்ணன் குழந்தை ஓநாய்களின் ஆர்ப்பரிப்பிடையே குளிர்காய வகையின்றிக் கிடக்கிறது. நெருப்பு நாடிச் சென்ற அண்ணனோ திரும்பி வரக் காணவில்லை. இங்கே அவர்கள் இந்நிலை; அங்கே அவனுக்கு என்னுற்றதோ? இந்தக் கவலைகளால் பொன்மணி உள்ளம் நைந்து நைந்து உருகிற்று. கண்ணீர் ஆறாகக் கன்னங்களில் ஒழுகி, அவன் அமர்ந்திருந்த கல் மீது முத்து முத்தாய் உதிர்ந்தது.

துயரத்திடையே பொன்மணி தன்னை மறந்தான். தன் சூழலையும் கூட மறந்தான். அவன் எதிரிலேயே ஆற்றில் சென்ற படகைக்கூட அவன் கவனிக்கவில்லை. ஆனால் படகில் சென்ற ஒரு வணிகன் அவனை உற்றுநோக்க நேர்ந்தது.பொன்மணியின் தோற்றத்தைவிட அவன் அருகே காணப்பட்ட ஒரு செய்தியே அவன் கருத்தைக் கவர்ந்தது.

பொன்மணி அமர்ந்திருந்த கல்லருகில் முத்துக்கள் குவிந்து கிடப்பதுபோலத் தோற்றின. அவன் பணம் பேராசை உடையான். அக்குவியல்கள் முத்துக்கள்போல் தோற்றம் ஒளித்தன. அது ஏதேனும் ஒரு பொருளா, அல்லது முத்துக்களாகவே இருக்கக் கூடுமா? இந்த எண்ணமே பொன்முடியின் திசையில் அவன் கூர்ந்து பார்க்கும்படி செய்தது. அவன் பார்க்கப் பார்க்க, முத்துக்கள் உண்மை முத்துக்களாகத் தோன்றியது மட்டுமல்ல; அவற்றின் குவியல் வரவரப் பெரிதாக வளர்ந்து கொண்டும் வந்தது.

வணிகன் பெயர் பொன்னாடை. அவன் படகைக் கரைக்குச் செலுத்தும்படி படகோட்டிகளைப் பணித்தான். படகு கரையில் வந்ததும் இறங்கிப் பொன்மணியை அணுகினான். பொன்மணி அப்போது அசையவில்லை. அவனைக் கவனிக்க வில்லை. அவனருகே முத்துக்கள் குவிந்து கிடந்தன என்பதும், அவன் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர்த் துளிகளே முத்துக் களாகப் பெருகின என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆனால் வணிகன் இவற்றை உணர்ந்தான். அவன் முத்துக்களை முதலில்