உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 33

அந்தக் காசுமாலை அருகில் உள்ள ஒரு நகரின் இளவரசி யினுடையது. திருடர் அதைத் திருடிக் கொண்டு வந்திருந்தனர். காவலர் அவர்களைத் துரத்தவே, அவர்கள் அதை மண்டபத்தில் போட்டுவிட்டு ஓடி ஒளிந்தனர்.

காசுமாலையை வைத்துக் கொண்டிருந்த செம்பியனைக் காவலர் கைப்பற்றிச் சென்றனர். அவனைக் கடுங்காவலில் வைத்தனர்.

அடுத்தநாள் சிறைக்காவலன் சோர்ந்த முகமுடையவ

னாய்க் காணப்பட்டான்.

"சோர்வுக்குக் காரணம் என்ன?" என்று கேட்டான்

செம்பியன்.

66

'காசுமாலை அகப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த காரிகை, ன்று பாம்பு கடித்து உயிரிழந்தாள்" என்றான் காவலன்.

66

‘என்னை மன்னனிடம் கொண்டுவிடு. நான் பிழைப்பிக் கிறேன்” என்றான் செம்பியன்.

மன்னன் அவனை வரவழைத்தான். பாம்பு தந்த மணி யினால் செம்பியன் இளவரசிக்கு உயிர் வருவித்தான்.

மன்னனும் அரசியும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை யில்லை. அவர்கள் செம்பியனுக்கே அவளை மணம் புரிவிக்க எண்ணினார்கள்.

வாழ்வில் கசப்படைந்த செம்பியன் முதலில் மறுத்தான். அதுகேட்டு இளவரசி கண்கலங்குவதை அவன் குறிப்பால் அறிந்தான். அவன் மணவினைக்கு இசைந்தான்.

மணமகளுக்குப் பாங்கியர் ஒப்பனை செய்தனர்.

மணமகனுக்குப் பாங்கர் ஒப்பனை செய்தனர். அச்சமயம் அவன் பழைய ஆடைகள் களையப்பட்டுப் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன.

பழைய ஆடைகளைத் துவைக்கச் சென்ற வண்ணார மாது வயது சென்ற கிழவி. அவள் ஆடையில் ஏதோ முடிந்திருப்பது கண்டு அவிழ்த்தாள். மலராயிருந்ததால் முகர்ந்து பார்த்தாள்.