உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218 ||

அப்பாத்துரையம் - 33



முடியும். இதுபற்றி உனக்குத் தெரிந்தவை யாவும் கூறு. பின் ஆவன செய்வோம்” என்றான்.

“அன்பனே, உன்னைப்போல புண்ணியவானும் இந்த உலகில் கிடையாது. என்னைப்போலப் போலியும் கிடையாது.

“உடன் பிறவாத நீ நான்கு நங்கையர்க்கும் உடன் பிறந்தவனிலும் இனிதான அண்ணனாக அமைந்திருக்கிறாய். உடன் பிறந்தவனான நான் அவர்கள் வாழ்க்கைக்குயமனாக வாழ்ந்து விட்டேன்.

இந்த நான்கு நங்கையர்களின் பெற்றோர் எங்கிருக்கிறார்களோ என்னவானார்களோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளை மாளாது காத்த இறைவன் அவர்களையும் காத்திருக்கக்கூடும் என்று மட்டும் இப்போது நம்ப இடம் இருக்கிறது. அவர்கள் தந்தை எழுமுடியும் என் தந்தை இறைமுடியும் உடன் பிறந்தவர்கள். ஆகவே, அவர்கள் என் தங்கையர்களே. இப்போது என் செல்வம் என்று இந்த ஊரார் கருதுவதில் பெரும்பகுதி அவர்களுடையதே. ஏனெனில், எங்கள் குடும்பச் செல்வம் அதில் காற்கூறுதான். தங்கையர்களின் தாய் கொணர்ந்த செல்வமே முக்காற்கூறு ஆகும். தன் தம்பியையும் தம்பி குடும்பத்தையும் ஒழித்தால் அவ்வளவு செல்வத்தையும் எனக்காக்கி விடலாம் என்று என் தந்தை நினைத்ததை நான் அறிவேன். அதை எப்படி அவர் செய்து முடித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திடுமென ஒருநாள் எல்லாரும் காணாமற் போயினர் நாங்கள் முறைப்படி இழவு கொண்டாடினோம். செல்வ முழுவதும் என் தந்தை கைக்கு வந்தது.

“அவரும் ஒரு சில மாதங்களுக்குள் இறந்ததால், நான் எதுவும் அறியாமலே இப்பெருஞ் செல்வம் எனக்குரியதாகி விட்டது. குழந்தை ஆவி குடியிருந்த வீடு உண்மையில் சிற்றப்பா வீடுதான். அதுவும் சின்னம்மை வழி வந்த வீடு. குழந்தை ஆவிக்கதை கேட்டபின். தந்தை குழந்தைகளை அந்த வீட்டில் கொன்றதனால் தான் அங்கே ஆவிகள் உலவுவதாக நினைத்தேன்.

“என் தந்தையின் கொடும் பழிகள் இப்போது விளக்கமாகத் தெரிகின்றன. அப்பழிகளுக்கு எவ்வளவு வருந்துகிறேன் என்பதை