உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228 ||

அப்பாத்துரையம் - 33




புட்டியைப் பற்றிய சிந்தனை அவன் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்கவில்லை. அவன் கைகளும் என்ன வேலை செய்தாலும் இடையிடையே பையைத் தொட்டுப் பார்க்கத் தவறியதில்லை.

கப்பலில் கீவுக்கு லோப்பாக்கா என்ற ஒரு நண்பன் பழக்கமானான். கீவ் எப்போதும் அழகிய வீடு வேண்டும் என்ற கனவில் ஆழ்ந்திருந்ததுபோல, அவன் எப்போதும் வாணிகம் நடாத்த ஓர் அழகிய படகு வேண்டும் என்ற கனவில் ஆழ்ந்திருந்தான். கீவ் எப்போதும் எதையோ சிந்திப்பதையும், அடிக்கடி பையில் கை வைப்பதையும்கண்டு அவன் வியப்படைந்தான். ஏதாவது பெருஞ் செல்வமோ அல்லது அரும்பொருளோ இருக்கலாம் என்று நினைத்து, அவன் “கீவ், உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதுபோலத் தோற்றுகிறது. எனக்கு ஒரு படகு வேண்டும் என்று நீண்டநாள் அவா, அதற்கு நீ பணம் கடனாய் உதவ முடியுமா?” என்று கேட்டான்.

கீவ் தான் வைத்திருந்த புதையல், அது பெற்றவகை, அதன் வியத்தகு ஆற்றல் ஆகிய யாவற்றையும் கூறி, “ஊர் போய் என் ஆவல் நிறைவேறியபின், உனக்குக் கடனாக அல்ல, இலவசமாகவே வேண்டிய தொகை தருவேன்.” என்றான்.

லோப்பாக்காவும் முதலில் எதையும் நம்பவில்லை. சல செய்திகளைக் கண்ணார நேரில் கண்டு. சிலவற்றைக் காதாரக் கேட்டபின்கூட அரைநம்பிக்கைதான் ஏற்பட்டது. ஊர் சென்றபின் நீ நினைத்தபடியெல்லாம் நடந்தால், நான் உன்னிடமிருந்து பணம் பெறுவானேன்? புட்டியையே விலைக்கு வாங்கிக்கொள்கிறேன்.” என்றான் அவன்.

இதன்பின் கப்பலில் போகும்போதே கீவ் தன் அவாவைப் புட்டிச்சாத்தனிடம் கூறினான்;

“ஹவாயில் கோனா என்ற இடத்தினருகில் நான் பிறந்தேன். பிறந்த இடத்திலேயே எனக்கு ஓர் அழகிய தோட்டமும் வீடும் கடற்கரையருகில் வேண்டும். தோட்டமெங்கும் பூஞ்செடிகள், கதிரவனொளியை வரவேற்கும் பல வண்ணக் கண்ணாடிகளாலான கதவுகள். பலகணிகள், சலவைக் கல் தளங்கள் ஆகிய யாவும் அதில் இடம் பெற வேண்டும். வெள்ளிப் பொன் பூச்சுப்