உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 235


அவன் வந்தபோது அவன் தன் குதிரையை மனம் போனபடி ஓடவிட்டு வந்திருந்தான். இப்போது அவன் அதனை அதன் முழுவேகத்தில் முடுக்கினான். குதிரைகூட இதை வெறுக்கவில்லை. அது கோனாவிலுள்ள தன் இலாயத்தில் சென்று, வளமான புல் தின்ன விரைந்தது.

கலைமாளிகையின் பணியாட்கள் அவன் திரும்பிய போது வியப்படைந்தனர். அவன் பாடிக்கொண்டே வந்தான். பாடிக் கொண்டே, என்றும் இல்லாதவாறு வீட்டின் அழகைக் கண்டான். கோக்குவாவின் கண்கள் கொண்டு அவன் அதைப் பார்க்க முயன்றான் என்பதை அவர்கள் எப்படி உணர முடியும்? வீட்டிற்குப் புதுத்தலைவி வருவதற்கு முன்பே புதுத்தலைவன் ஏற்பட்டு விட்டதாக மட்டும் அவர்களுக்குத் தெள்ளத் தெளியத் தெரிந்தது.

ஹோனானா செல்ல அவன் திருமண நாள்வரை காத்திருக்கவில்லை. அதற்கு நாள் பார்க்கும் சாக்கிலும், சரக்குகள் வாங்கும் போக்கிலும், நண்பர்களைக் காணும் வாக்கிலும் அவன் பலதடவை அங்கே சென்றான். அவன் தன்மீது கொண்ட ஆர்வத்தைக் கோக்குவா அவன் கண்களில் கண்டாள், அவனும் அவளுக்குத் தான் வருவதனால் ஏற்படும் மகிழ்ச்சியை அவள் கண்ணொளியில் கண்டுமகிழ்ந்தான்.

அவன் திருமணச் செய்தி சிறிதுசிறிதாகப் பணியாட்களுக்குத் தெரியலாயிற்று. அவன் கலகலப்பின் பொருளும் இப்போது அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்களும் அதில் பங்கு கொண்டனர்.

ஒருநாள் வழக்கம்போல அவன் பாடிக்கொண்டே எழுந்தான். குளிப்பறையில் தண்ணீர்த் தொட்டி நிரப்புபவன், வெந்நீர் ஊற்றிலளாவுபவன் முதலிய பணியாட்களிடம் வழக்கம் போலவே ஆர்ப்பாட்டம் செய்தான். கதவை அடைத்துக் கொண்டு அவன் தொட்டியில் அமர்ந்து குளிக்கும் ஓசையுடன் ஓசையாக, அவன் பாட்டும் எங்கும் கணகணவெனக் கேட்டது.

ஆனால், திடீரென்று பாட்டு நின்றது. குளிப்பும் விரைவில் நின்று விட்டது. பாடிக்கொண்டு அறைக்குள் சென்றவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு வெளியே வந்தான். அன்று பகல்