உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 243


“அன்பரே, பாடலில் இல்லாத ம ல்லாத மகிழ்ச்சி ஆடலில் எங்கிருந்து வரும்? துன்பத்திலேயே அழுந்தியவர்கள் கூடக் காதலித்த பெண்ணை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை மணம் செய்யுமுன் கவலையில்லாத இளங்காளையாக எங்கும் உலவியதை நான் அறிவேன். நான் வந்தபின் நீங்கள் கவலையுற்று வாடுவதை அறிந்தும் நான் எப்படி மகிழ்ச்சியோடிருக்க முடியும்? நீங்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை எனக்காக வருவித்துக் கொண்டாலும், உங்கள் அகத்தின் வாட்டம் ஆகம் முழுவதையும் வாட்டுவதை நான் அறியாமலா இருக்கிறேன்?” என்றாள் அவள்.

அவன் அவளை உட்காரவைத்து அருகிலமர்ந்து கையைப் பற்றிக் கொண்டு ஆதரவாகப் பேசினான். “பாவம்! என் வாட்டத்தின் காரணமறியாமல் நீ வீணே வருந்துகிறாய். அது உன்னால் வந்ததல்ல. உன் காதலைப் பெற நான் கொடுத்த விலைதான் அது. பொருளைப் பெற்றபின் விலைக்கு வருந்துவார்களோ? நான் நடந்தவை யாவற்றையும் கூறிவிடுகிறேன். அப்போது தான் என் துன்பம் தவிர்க்க முடியாதது என்று அறிந்து அதற்காக நீ வருத்தப் பட மாட்டாய்.” என்றான்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவன் மெல்ல விளக்கினான். கலைமாளிகையைத் தான் பெற்ற வகை, அதன்பின் காதல்வாழ்வுக்கு ஏற்பட்ட இடையூறு, அதை நீக்கத் திரும்பவும் புட்டிச்சாத்தனைத் தேடியது. அதற்குக் கொடுத்தவிலை ஆகிய யாவற்றையும் அவன் அவளுக்கு விரிவாகக் கூறினான். பின், “இப்போது என் துயரத்துக்குரிய காரணத்தை நீ அறிந்து கொண்டாய். ஒரு காசுக்குக் குறைந்து புட்டிச்சாத்தனை விற்க முடியாதாதலால், நான் இனி இறுதிக்கால நரக வேதனையிலிருந்து மீள முடியாது. ஆகவே, என் துயரை என்னிடம் விட்டு, நீ உன் மகிழ்ச்சியை மட்டுமாவது எனக்கு அளிக்கப்பார்,” என்றான்.

கோக்குவா எழுந்து நிமிர்ந்து நின்றாள். ஒரு கணத்தில் பெண்ணினத்தின் பீடு முழுவதும் அவள் சிற்றுடலில் பெருக்கெடுத் தோடிற்று. “பெண்ணைக் காதலித்து ஒரு ஆண் கெட்டான் என்ற பெயரைக் கோக்குவா பொறுக்கமுடியாது. எனக்காக நீங்கள் உங்கள் நலனைக் கெடுத்துக் கொண்டால்,