உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

||-

அப்பாத்துரையம் - 35

பெருந்தகையீர்! தங்கள் கவலைக்குரிய காரணம் யாது? அதை நான் அறியலாமா?" என்று வினவினாள்.

பெரியார் சற்றுச் சிந்தித்தார். "நீங்கள் கூரிய அறிவுடையவர்கள். உங்களிடம் சொல்வதனால் கேடு இல்லை. நன்மைகூட ஏற்படலாம். இவன் உங்கள் குடிக்குப் பெருமை தருவான். பெரும் புகழ் அடைவான். இதில் ஐயமில்லை. ஆனால், இளமையில் இவனுக்கு எதிரிகள் இருப்பார்கள். அவர்கள் வஞ்சத்தால், இன்னல்கள் ஏற்படும். நீங்கள்தான் அவனுக்கு வேண்டிய பாதுகாப்புச் செய்ய வேண்டும் என்றார்.

"தாங்கள் எதிர்கால உணர்வுடையவர்கள். தங்கள் சொற்கள் எனக்கு மகிழ்வையும் ஊட்டுகின்றன. கவலையையும் தருகின்றன. ஆனால், நீங்களே கவலை அகற்றும் வழிகளையும் கூறவேண்டும். அவனை இடரிலிருந்து காக்க என்னாலான எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன். நான் என்னென்ன வகையில் முயற்சி செய்ய வேண்டும்? இதைத் தெரிந்துரைக்க வேண்டுகிறேன்” என்று அரசி மன்றாடினாள்.

66

பெரியார் கடம்பன் உயிர்நிலைமாயம் அறிந்து கூறினார். 'அம்மணி, தங்கள் புதவல்வன் பிறந்த அதே கணத்திலே, ஒரு நீல மீனும் பிறந்திருக்கிறது. அது தங்கள் மாளிகையின் தோட்டத்திலுள்ள தெப்பக்குளத்திலேயே வாழ்கிறது. அதன் வயிற்றில் ஒரு பொன்மாலை வளர்கிறது. அதுவே உங்கள் புதல்வனின் உயிர். இந்த மாயத்தை யாரிடமும் கூறாதேயுங்கள். அதே சமயம் அந்த மீனை உயிர்போல் பேணுங்கள். அது பாதுகாப்பாக இருக்கும்வரை, புதல்வனை இடர் அணுகாது என்று உரைத்தார்.

அரசி செந்தாமரைக்கு ஆறுதல் ஏற்பட்டது. அவள் குளிக்குமுன் குளத்தில் நின்று பூசை செய்தாள். நீரில் கரைத்த இனிய உணவை நீல மீன் உண்டு வளம்பெற்றது.குளத்திற்கு அவள் நாற்புறமும் காவல் வைத்தாள். ஆனால், மாயத்தின் மருமம் அவளைத் தவிர யாருக்கும் தெரியாது.

ஒரே ஒரு பேர்வழி மாயத்தை அரைகுறையாகக் கேட்க நேர்ந்தது. அதுவே அரசி கயற்கண்ணி. பெரியார் பேச்சின் நடுப்பகுதியிலேயே அவள் பக்கத்து அறைக்கு வந்தாள். அவள்