உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எந்த முனையில் ஐயனே!

செங்கட் கடுங்கோ என்னும் பெயருடைய வழக்கு மன்றத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நடுநிலை தவறாதவ ராயினும் கடுமைமிகுதி உடையவர். குற்றவாளிகளிடம் சொட்டுச் சொட்டென்று கடுஞ்சொற்களும் வழங்குவார்.

ஒருநாள் துணிவும் வாய்த்துடுக்கும் உடைய ஒரு குற்றவாளியை நோக்கித் தம் கைப்பிரம்பை நீட்டிக் காட்டிய வண்ணம் அவர், "இதோ இந்தப் பிரம்பின் முனையில் ஒர் போக்கிலி நிற்கிறான்; பார்" என்றார். அவன் உடனே “எந்த முனையில், ஐயனே!" என்றான். தலைவர் அதைக் கேட்டு வெட்கிப் போனார்.

"எண்ணாது பேசுபவர் இழுக்குறுவர்”