உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

45

ளவரசே, என்னால் எது முடியும், எது முடியாது என்பது பற்றி உமக்கு ஏன் கவலை? உம் அண்ணன்மார் இப்போது இங்கிருந்தால், என் சொல்படி நடந்து, அரசைப் பெற்று விடுவார்கள்” என்றது தவளை.

“நான் என்ன செய்ய வேண்டும்” என்று மருதன் கேட்டான். “சற்றுப் பொறுத்திருங்கள்" என்று கூறித் தவளை குட்டைக்குள் மூழ்கிற்று.

அது பாசி பிடித்த ஒரு சிறு மூட்டையை அவனிடம் தந்தது. "இதைக் கொண்டு போய், உம் தந்தையிடம் கொடுங்கள்” என்று கூறி மறைந்தது.

அந்த மூட்டையுடன் மருதன் புறப்பட்டான். ஆனால், அவன் உடனடியாக அவன் தந்தையிடம் போகவில்லை. தேர்வுக்குக் குறித்த மூன்று மாதங்களும் கழியும்வரை அவன் பின்னும் அலைந்தான். தேனிலந்தைபற்றி வேறு எங்காவது ஏதாவது செய்தி தெரிய வரலாம் என்று அவன் கருதினான்.

மூன்று மாதங்கள் கடந்தன. வேறு எந்தச் செய்தியும் மருதனுக்குக் கிட்டவில்லை. அவன் தந்தையிடம் வந்தான்.

அவன் அண்ணன்மார்கள் அவனுக்கு முன்பே வந்திருந்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த சரக்கு மூட்டைகள் அரண்மனையைச் சூழ எங்கும் நிறைந்திருந்தன.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அரசன் தன் பிள்ளைகள் காண்டுவந்த சரக்குகள் அத்தனையையும் பார்வையிட்டான். வகைவகையான மென் துகில்கள் இருந்தன.

அவை அவன் கண்களைப் பறித்தன. அவற்றில் பல அன்னத்தின் இறகைவிட மெல்லியவையா யிருந்தன. ஆனால், எதுவும் அரசன் சுண்டுவிரல் கணையாழிக்குள் செல்லத் தக்கவையாய் இல்லை; ஆனால், அவையாவும் அவன் கைக் கடகத்துக்குள் செல்லத்தக்க அளவிலேயே இருந்தன.

மருதன் எதுவும் கொண்டு வராதது கண்டு, அண்ணன்மார் ஏளனம் செய்திருந்தனர். மற்றக் குடிமக்களோ, அவன் அமைதியும்,வேண்டா வெறுப்பும் கண்டு வியப்படைந்தனர்.