உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பலினும் பலானும்

மன்னன் ஆர்தரும் அவருடைய வீரரும் வட்டமேடையைச் சுற்றி உட்கார்ந்திருக்கையில் ஓரிளமங்கை குதிரை ஏறி வந்து அவர்கள் முன் இறங்கினாள். அரசனை வணங்கி அவள் தான் போர்த்திருந்த சால்வையை அகற்றியபோது அவள் இடுப்புடன் இடுப்பாக ஒட்டி ஒரு வாள் கிடந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். அரசர் “நீ ஏன் வாளை அணிந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அவள், அரசே! நான் வாளை அணிந்திருக்க வில்லை. ஒரு மாயக்காரன் மாயத்தால் அது என் உடலுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை என் உடலிலிருந்து பிரித்தெடுப்பவனே வீரருள் சிறந்த வீரனாவான்,” என்றாள். வட்டமேடை வீரர்களனைவரும் ஒவ்வொருவராக வந்து அதை இழுத்துப் பார்த்தனர். அவர்கள் அம்மங்கையை இழுத்தனரே யன்றி வாளை அகற்ற முடியவில்லை. அரசரே வந்து முயன்றும் பயன் ஏற்படவில்லை. மங்கை அனைவரையும் கண்டு நகைத்து நின்றாள்.

ஆர்தர் வட்டமேடை வீரருள் பலின் பெருந்தகை' ஒருவன். அவன் ஆர்தரின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானைக் கொன்ற தனால் வட்டமேடையினின்று அகற்றப்பட்டு அரண்மனை யினொருபுறம் காவலில் வைக்கப்பட்டிருந்தான். வட்டமேடை

வீர

ரல்லாம் முயன்று தோல்வியடைந்த அம் டந்த அம் முயற்சி யிலீடுபட்டு வென்றால் தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெறலாமே என்று அவன் எண்ணினான். ஆனால், தன் அறையை விட்டு வெளிவர இடந்தரத்தக்க நல்ஆடை எதுவும் அவனிடம் இல்லை.

வாளணிந்த மங்கை2 அரசர் பேரவையிலிருந்து மீண்டும் வரும்போது பலின் இருந்த அறைவழியே போக வேண்டி யிருந்தது. அதற்கே காத்திருந்த பலின் அவள் முன் சென்று “உன்