உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அப்பாத்துரையம் - 36

வளானபடியினாலே நான் உன்னைத் தொடர்ந்து வரமுடிந்தது,” என்றும் கூறி முன்போல் அளவளாவினாள். மெர்லினைத் தான் உண்மையிலேயே தந்தையாக எண்ணிவிட்டதாக அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். மேலும் “என்னை நீ வெறுக்கும்படி நான் செய்த குற்றம் என்ன?" என்று அவள் மன்றாடிக் கேட்டாள். தன்மீது அவன் ஐயப்படுவதாகக் கேட்டதே மிகவும் ஆத்திரம் கொண்டவள் போல் நடித்து அழுதாள். தான் மந்திரத்தை அறிய முயல்வது விளையாட் டாகவேயென்றும், தன் மீது ஐயங்கொள்வது தகாதென்றும் அவள் வாதிட்டு அவன் மனத்திலுள்ள ஐயத்தைப் போக்க முயன்றாள். "என் அன்பை எவ்வகையில் வேண்டுமாயினும் தேர்வுக்கு உள்ளாக்குங்கள். நான் யாரிடமும் பற்றுக் கொள்ளாத கன்னி; தாய் தந்தை யாரென்று அறியேன்; பாசங்காட்ட உடன் பிறந்தார் கூடக் கிடையாது; உம்மிடமே என் முழு அன்பையும் வைத்தேன்; உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்; இப்படியிருக்க, என் அன்பை ஏற்று அதற்குக் கைம்மாறாய் என்னை நம்புவதாகக் காட்டி அம்மந்திரத்தை எனக்குக் கற்பிக்கக் கூடாதா?” என்று அவள் மன்றாடினாள்.

ஒருநாள் புயலும் மழையும் எண்டிசையும் ஒரு திசையாக்கி அதிர்ந்தது. அவர்கள் ஒரு படர்ந்த மரத்தின் பிளவில் ஒதுங்கினர். விவியன், மெர்லினின் கால்களை கட்டிக்கொண்டு,"இன்று நாம் இறப்பினும் இறக்கக்கூடும். உமக்குப் பிள்ளையில்லை; எனக்குத் தந்தையில்லை. இருவருக்கும் இறுதி போல் தோன்றும் இவ்விறுதி நாளில் என் வேண்டுகோளை நிறைவேற்றி ஒரு சில நொடிகள் என் உள்ளத்திற்கு நிறைவு தரப்படாதா?" என்று குறையிரந்தாள்.

மெர்லின் மனம் பலவகையில் கலங்கியிருந்தது. பலநாள் மனத்துயரில் உண்டியும் நீருமில்லாதிருந்ததால் கண்கள் பஞ்சமடைந்தன. விவியன் பேச்சும் விளையாட்டும் மட்டுமே அவனுக்கு ஊசலாடும் உயிரிடமாகத் தோற்றின. அவன் அறிந்தும் அறியாமலும் அவளுக்கு அம்மந்திரத்தை ஓதுவித்து, அதனைப் பயன்படுத்தும் வகையையும் கற்பித்தான். அவள் மன நிறைந்தது போல பாசாங்கிட்டு எங்கே அதன் உண்மையைச் சற்றறிகிறேன் என்று அதைக் கையாடிப் பார்ப்பது போல்