17. வெல்போர்த் தீஸியஸ்
(கிரேக்கர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தெற்கே வந்து நாகரிக மடையுமுன்பே நாகரிக உலகில் தலைசிறந்து வாழ்ந்தவர்கள் கிரேக்கர்கள். கிரேக்க, கிரேக்க நாகரிகக் கலப்பைச் சுட்டிக்காட்டுவது அதேனிய வீரன் தீஸியஸ் கதை)
நடுநிலக் கடலின் நடுவே பதித்த ஒரு மணிப்பதக்கமாகத் திகழ்வது கிரீட் தீவு. அதன் மன்னன் மினாஸ் அறிவுக்கும் வீரத்துக்கும் நேர்மைக்கும் பேர் போனவன். ஆயினும் அவன் கடல் தெய்வம் பாஸிடானின் கடுஞ் சீற்றத்துக்கு ஆளானான்.
மினாஸ் பல போர்கள் நடத்தி வெற்றி பெற்றிருந்தான். அந்த வெற்றிகளுக்காகத் தேவர்களுக்கு நன்றி தெரிவித்து விழாப் பலி அளிக்க விரும்பினான். இதுவரை எவரும் அளித்திராத சிறப்புமிக்க பலி எருது ஒன்றை அவன் நாடித் தேடினான். மினாஸ்மீது பற்றுமிக்க பாஸிடான் தெய்வீகத் தன்மையும் ஆற்றலும் அழகும் உடைய ஒரு வெள்ளெருதை இதற்காக அனுப்பிவைத்திருந்தான். அதன் அழகு மினாஸைக் கவர்ந்தது. அதன் மீதுள்ள ஆவலால், அவன் அதைப் பலியிடாமல் தனக்கென வைத்துக் கொண்டு, வேறோர் எருதைப் பலியாக வழங்கினான்.
தன்னை எமாற்றிய அன்பன் மீது பாஸிடான் கடுஞ்சினமும் பகைமையும் கொண்டான். முதலில் அவன் மினாஸின் எருது வெறிகொள்ளும்படிச் செய்தான். அது செய்த அழிவுக்கு
வில்லை. ஆனால், இதனாலும் பாஸிடோன் சினம் தணியவில்லை. அவன் மினாஸின் மனைவியின் கருவிலிருந்தே இன்னும் கொடிய ஓர் அழிவுப் பூதத்தை உண்டு பண்ணினான். எருதின் தலையும் மனித உடலும் கொண்ட அந்தப் பூதத்தை மக்கள் எருது அல்லது மினோட்டார் என்றனர். அது