உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

121

நூலைக் கொண்டு வந்திருந்தாள். மருட் கோட்டத்துக்கு வெளியே ஒரு மரத்தில் அதன் ஒரு கோடியைக் கட்டிவிட்டு, வரும்வழி நெடுக உண்டையை அவிழ்த்து நூலை நெகிழ விட்டுக் கொண்டே வந்திருந்தாள். இப்போது அவள் அந்த நூலை மீண்டும் உண்டையில் சுற்றிக்கொண்டே நூலைப் பின்பற்றி வெளியே தீஸியஸுடன் சென்றாள்.

அரியட்னேயுடன் தீஸியஸ் தன் தோழர் பதின்மூவரும் இருந்த கப்பலண்டை வந்தான். அவர்கள் அவனை எதிர்பார்க்கவில்லை. கண்டதும் மகிழ்ச்சிக் கூத்தாடத் தொடங்கினர். ஆனால், தீஸியஸ் இன்னும் அவர்களுக்கு மினாஸால் ஏற்படக்கூடும் துன்பத்தைத் தெரிவித்து, விரைந்து அதேன்ஸுக்குப் புறப்படும்படி கட்டளையிட்டான்.

வழியில் தீஸியஸ் தன் தோழர்களுக்கு அரியட்னே யார் என்பதைத் தெரிவித்து, அவள் உதவிய வகைகளையும் அவ்வுதவி யுடன்தான் மினோட்டாரைக் கொன்ற வகையினையும் விரித்துரைத்தான். அனைவரும் தீஸியஸ் வீரத்தையும் அரியட்னேயின் அரிய அறிவுக் கூர்மையையும் காதலுறுதியை யும் புகழ்ந்தனர்.

மினோட்டார் இறந்ததை அறிந்த மினாஸ், தீஸியஸையும் அதேனிய இளைஞர், நங்கையரையும் பிடித்துக் கொண்டுவர ஆட்களனுப்பினான். அவர்கள் வருமுன் அதேனியர் நடுந்தொலை கடலில் சென்றிருந்தனர். அதேன்ஸ் நகர்மீது தனக்கிருந்த ஆதிக்கம் அகல்வது கண்டு சினந்தெழுந்த மினாஸ் இளைஞனைப் பிடிக்கச் சென்ற வீரர்களைத் தூக்கிலிட்டான்; ஆன னால், தன் புதல்வி அரியட்னேகூட எதிரியுடன் சேர்ந்து ஓடியது கேட்டதே, அவன் சீற்றம் கரைகடந்தது. மருட்கோட்டத்தைப் போதுமான அளவு திறமையுடன் அமைக்கவில்லை என்று கருதி அவன் டேடலஸ்மீது பாய்ந்தான். டேடலஸும் அவன் புதல்வன் இக்காரஸும் கடுஞ் சிறையில் தள்ளப்பட்டனர்.

டேடலஸும், இக்காரஸும் தம் கலைத் திறத்தைப் பயன்படுத்தித் தப்பியோட வழிசெய்தனர். அவர்கள் கழிகளைப் பிணைத்து மெழுகு பூசி இறக்கைகள் செய்தனர்.