உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

||--

அப்பாத்துரையம் - 36

கம்பிளியை என்னிடம் கொண்டு வந்து கொடு; நான் அதன்பின் அரசுரிமை தருகிறேன்” என்றான்.

66

ஜேஸன் பொன்மறியைப் பற்றி அதுவரை ஒன்றும் கேள்விப்பட்ட தில்லை. அதுபற்றி உசாவினான். யாருக்கும் அதுபற்றி ஒன்றும் தெரிய வில்லை. அதை அடைவது எவருக்கும் கைகூடாத ஒரு செயல்; பீலியஸ் அதைக்கூறி ஏமாற்றவே பார்க்கிறான்" என்று பலரும் தெரிவித்தனர். கைக்கூடாதது என்று எதையும் கருத இளைஞனான ஜேஸனின் உள்ளம் மறுத்தது. எப்படியும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியைத் தேடுவது என்று கச்சைக் கட்டிக் கொண்டான். அவன் உறுதி கண்டு எல்லாரும் திகைப்படைந்தனர்.

பொன்மறியைத் தேடுவதற்கான பயணம் இதுவரை உலகில் எவரும் செய்திராத நெடும்பயணமாயிருந்தது. அதனைச் செய்து முடிக்க, உலகில் இதுவரை துவரை இல்லாத வகையில் வலிமையும் விரைவும் வாய்ந்த கப்பலொன் று வேண்டியிருந்தது. எத்தகைய இடையூற்றுக்கும் அஞ்சாத வீரத் தோழரும் தேவைப்பட்டனர். இவ்விரண்டு ஏற்பாட்டையும் பெறுவதில் ஜேஸன் சில நாட்கள் போக்கினான்.

இப்பெருங்கப்பலைக் கட்டுவதற்கு ஆர்கோஸ் என்ற அருந்தச்சன் முன்வந்தான். அவன் பெயரையே கப்பலுக்கு இடுவதாக ஜேஸன் கூறியதால், தச்சன் தன் முழுத் திறமையையும் காட்டினான். வலிமைமிக்க பெருமரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டன. பலநாள் பல ஆட்கள் ஒத்துழைப்புடன் கப்பல் கட்டி முடிந்தது. அதன் வலிமை, அழகு, விரைவு ஆகியவற்றை எல்லாரும் புகழ்ந்தனர். ஆர்கோநாவம் என்ற அதன்பெயர் எங்கும் பரந்தது.

ஜேஸனின் துணிச்சலையும் கப்பலின் பெயரையும் கேட்டுக் கிரேக்க உலகின் தலைசிறந்த வீரர் பலர் நீ முந்தி நான் முந்தி எனக் கப்பலில் உடன் செல்ல முன்வந்தனர். ஜேஸன் அவர்களில் பேர்போன வீரர்களாக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்தான். ஹெராக்ளிஸ், காஸ்டர், பாலடியூஸிஸ்; மெலீகர், பீலியஸ், லின்ஸியஸ் முதலிய பல மாவீரர் அவர்களிடையே இருந்தனர். தவிர யாழிசையால் கல்லும்