(148) ||
அப்பாத்துரையம் - 36
அட்லாண்டா. அவள் பத்து ஆடவராலும் தாக்குப் பிடிக்க முடியாத உடல் வலிமையும் வீரமும் உடையவள். அவள் திறங்கண்டு மெலீகர் அவளை மிகவும் நன்கு மதித்து நேசித்தான். அவள் மணமாகாதவளாயிருந்தால், கட்டாயம் அவளை மணந்திருப்பான். அவளும் அவனை ஏற்றிருப்பாள். ஆனால், காதலுக்கு இடமில்லாமலே அவர்களிடையே ஒருவர்க் கொருவர் மதிப்பும் நேசமும் வளர்ந்தன. போரில் இருவர் குதிரைகளும் ஒன்றையொன்று வளையமிட்டன. வேட்டையில் ஒருவர் அம்பும் தம்முன் இணைந்து பழகின.
பலநாள் திரிந்து வேட்டையாடி அவர்கள் பன்றியைக் காலிடோன் எல்லையிலிருந்து நெடுந்தொலை துரத்தினர். ஆனால், அதை ஒழிக்காமல் இருவரும் ஓய்வு கொள்ள இணங்கவில்லை. இரண்டுநாள் இருவரும் கண்ணயராமல் தொடர்ந்தும் அது அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஏய்த்துக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் ஒருபெரும் பாறை ஒன்றை அவர்கள் அணுகியபோது, பின்னாலிருந்து அவர்கள் பன்றியின் உறுமலைக் கேட்டனர். அச்சமயம் பின்னாலிருந்து வந்து வேடுவர் படை முழுதும் அதன்மீது பாய்ந்தது. அது அத்தனை பேரையும் கால்வேறு கைவேறாகப் பெயர்த் தெறிந்து பின்னும் கும்மாளமடித்தது. தொலைவிலிருந்து வந்த சிலரும் அதை அணுக அஞ்சி நடுங்கினர்.
அட்லாண்டா சட்டெனத் திரும்பித் தன் வில்லை வளைத்து நாணேற்றி அம்பெய்தாள். அது பன்றியின் நெற்றிப் பட்டத்தில் தைத்தது. அது அலறிக் கொண்டு விழுந்து புரண்டது. அதன் குருதி எங்கும் பரந்தது; ஆனால், அப்போதும் அது வாளா இறக்க மனமின்றி முழு மூச்சுடன் திமிறி எழுந்தது. அது இறுதி நேரப் பாய்ச்சலென்றும் பாராமல், மெலீகர் அதன்மீது தன் ஈட்டியைப்பன்றி ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வந்து அதன் தோலை உரித்து மெலீகரிடம் தந்தனர்.
மெலீகர் அதை அட்லாண்டாவிடம் தந்த வண்ணம், "அம்மணி! கும்மாளமடிக்கும் இவ்விலங்கின்மீது முதல் அம்பு எய்து வீழ்த்தியது நீங்களே. உங்களுக்கும் அதன் தோல் உரியது” என்று கூறினான்.