உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

||-

அப்பாத்துரையம் 36

மனமுறிவடையவில்லை. ஒவ்வொரு தோல்வியும் அவன் ஆவலைப் பெருக்கிற்றேயன்றித் தணிக்கவில்லை. விடாமுயற்சி யுடன் அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே யிருந்தான்.

கடைசியில் அவன் ஒருநல்லறிவனிடம் சென்று அறிவுரை கோரினான். அதேனே இறைவியின் திருக்கோயில் சென்று இரவு முற்றும் விழித்திருந்து வழிபாடற்றி அத்தெய்வத்தின் அருளுதவியை நாடும்படி அவன் கூறினான். பெல்லராஃவான் அவ்வண்ணமே சென்று வழிபாடாற்றினான். ஓரிரவு கழிந்தும் தயங்காது அடுத்த இரவும், அதற்கடுத்த இரவும் இருந்து கடுவிழிப்புடன் இ டைவிடா வழிபாடியற்றினான். மூன்றாம் நாளிரவு அவன் கண்கள் அவனை மீறித் துயில் கொண்டன. அதுகண்டு அதேனே இரங்கி அவனுக்குத் துயிலில் காட்சியளித்தாள். அவள் கையில் பொன்னாலான கடிவாளம் ஒன்று இருந்தது. அதை அவனிடம் நீட்டிக்கொண்டே அவள், “பெல்லராஃவான்! உன் அன்புறுதிக்கு உன்னை மெச்சினேன். இதோ இந்தப் பொற்கடிவாளம் உனக்க உதவும், போ!' என்றாள்.

பெல்லராஃவான் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பறக்குங் குதிரை பெகாஸஸ் ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் மெல்லக் குதிரையை அணுகி, பொற் கடிவாளத்தை அதன் தலைமீது வீசினான். கடிவாளத்தின் அழகொளியில் மயங்கிப் பெகாஸஸ் அசையாது நின்றது. கடிவாளத்தைப் பூட்டியதும் அவன் சட்டென்று அதன்மீது தாவி ஏறினான். இப்போது பெகாஸுஸுக்குத் தன்னுணர்வு வந்துவிட்டது. அது சீற்றமும் வீறும் கொண்டு வானில் எழுந்து பறந்தது. குட்டிக் கரணங்களிட்டுத் தன்மீது ஏறிய பெல்லராஃவானைக் கீழே தள்ள முயற்சி செய்தது. ஆனால், எவராலும் அணுகமுடியாத குதிரையை ஒரு தடவை அணுகி ஏறியபின்பு, அவன் கடிவாளத்தின் பிடியை விடாமலும், குதிரைமீது அணைத்த தன் கால்களை நெகிழ விடாமலும் கெட்டியாக உட்கார்ந்து கொண்டான். குதிரை எத்தனை குட்டிக் கரணமிட்டதன்றி வேறெவ்வகையிலும் அவன் அசையவில்லை. தன்னாலியன்ற மட்டும் தள்ளிவிட முயன்றும் பயனில்லாததால்,