உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

175

அரசன் அரசி அறியாமல் சிலநாள் அங்கேயே தங்கியிருந்தது. தனியாக ஸ்தெனேபீயா உலவிய சமயம் அவள் முன் சென்றான். அவள் முதலில் அச்சங் கொண்டாள். ஆனால், பெல்லராஃவான் அவளுக்கேற்றபடி நடித்தான். அவள்மீது தனக்கு இப்போது புதிதாகப் பாசம் ஏற்பட்டு அவள் திட்டப்படி நடக்கவே வந்திருப்பதாகக் கூறினான். ஸ்தெனோபீயா தன் விருப்பம் நிறைவேறப் போவதாக எண்ணி மகிழ்ந்து கூத்தாடினாள்.

பெல்லராஃவான்

ஸ்தெனோபீயாவைக்

குதிரை மீதேற்றினான். அவனும் தன் பின்னால் ஏறுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவன் ஏறாமல் பெகாஸஸின் காதில் ஏதோ கூறினான். குதிரை உடனே வானோக்கிப் பறந்தது. ஸ்தெனோபீயா நடுநடுங்கிக் கதறினாள்; குதிரையைத் தன் வலுக்கொண்ட மட்டும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

ஆனால், பெகாஸஸ் கதிரவனை எட்டிப்பிடிக்க எழுவது போல நேரே செங்குத்தாகப் பறந்தது.ஸ்தெனோபீயாவின் தலை சுழன்றது. திடுமெனப் பெகாஸஸ் கீழ்நோக்கிப் பறந்தது. தன்கீழே கடல் தொலைவில் தெரிவது கண்டு ஸ்தெனோபீயா பின்னும் நடுக்கமடைந்து கதறினாள். அவள் கைகால்கள் உதறலெடுத்தன. குதிரை நடுக்கடலில் வந்தவுடன் சட்டெனத் திசை திரும்பிக் குட்டிக் கரணங்களிட்டு மீண்டது. ஸ்தெனோபீயா பிடியகன்று கடலில் விழுந்து இறந்தாள்.

வந்தான். பிரேட்டஸ் தன்

மனைவியைப்

பெல்லராஃவான் திரும்பி டிரின்ஸுக்கும் லிஸியாவுக்கும் பற்றியோ, அயோபேட்டிஸ் தன் மகளைப் பற்றியோ எதுவும் கேட்கத் துணியவில்லை. ஆனால், அவன் சீற்றம் தம்மீது பாயாதிருந்தது கண்டு அமைந்தனர். அத்துடன் ஸ்தெனோபீயாவின் தங்கை அவன்மீது காதல்கொண்டதறிந்து, அவளை அவனுக்கு மணம் செய்து வைத்தனர்.

பெல்லராஃவான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானான். ஆனால், ஸ்தெனோபீயா தனக்குச் செய்த பழியை அவனால் மறக்க முடியவில்லை. மூத்த பிள்ளையை நாடாளவிட்டு அவன் பெகாஸஸுடன் உலகம் சுற்றப் போவதாகக் கூறிப் புறப்பட்டான்.