உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

180

அப்பாத்துரையம் - 36

அவன், "அப்பனே! தண்ணீர் கண்ட இடம் தானே ஏழைக்குத் தங்குமிடம்? நான் அயலான். அயல் மரபினன். எனக்கு நகரில் இடம் ஏது? நீ பெருந்தன்மை உள்ள நாயன். உன் வீட்டில் ஓரிரவு தங்க இடம் கொடு. உனக்கு நன்மை உண்டு" என்றான்.

பெரிகிலுக்கு இக்கோரிக்கையை மறுக்கவும் மணம் ல்லை. ஏற்கவும் முடியாது கலங்கினான். மனைவியின் பொல்லாக் கோபம் அவன் மனக்கண் முன்பு நின்று அவனை அச்சுறுத்தியது. ஆயினும் மன உறுதியில்லாமலே, ஆண்டியுடன் வீடுநோக்கி நடந்தான்.

கழுதையின் காலடியோசை கேட்டு, அவன் பிள்ளைகள் ஆவலுடன் வழக்கம்போல ஓடிவந்தனர். அயலான் முகமும் தோற்றமும் கண்டு அவர்கள் அஞ்சி விலகினர். ஒவ்வொருவராகத் தாயின் கால்களைச் சுற்றி நின்று ஒளிந்தனர். தாய் குஞ்சுகளைப் பாதுகாக்க வரும் பெட்டைக்கோழிபோல் திமிறிக்கொண்டு என்ன காரியம்?' என்று பார்க்க வந்தாள்.

"இது யார்? என்ன சாதிப்பயல்? இந்த மதத்துரோகியை ஏன் இங்கே கொண்டு வந்தாய், அதுவும் இந்நேரத்தில்?” என்று அவள் அலறினாள்.

“நான் செய்தது தப்புத்தான். ஆனால், என்மீது காட்டும் கோபத்தை இந்த ஏழைமீது காட்டாதே. அவன் ஆளற்றவன்; சத்தியற்றவன்; ஓர் இரவு தங்கியிருந்துவிட்டுப் போகட்டும் என்றான் பெரிகில்.

>>

அவள் கேட்கவில்லை. “உடனே வெளியே அனுப்பி விடு" என்று ஆர்ப்பரித்தாள்.

அவன் வாழ்க்கையில் முதல் தடவையாக, அவன் கேட்கவில்லை. “இன்று இந்த இரவில் நான் அனுப்ப முடியாது; நாளை அனுப்பலாம்” என்றான்.

அவன் துணிவு கண்டு மனைவி மலைப்படைந்தாள். வெறுப்புடன் 'சீ, நீ ஒரு மனிதனா' என்ற குறிப்பை வீசி எறிந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். குழந்தைகள்கூட அவளுடன் சென்று பதுங்கின.

எவர் உதவியுமின்றிப் பெரிகில் ஆண்டியைத் தானே இறக்கி, ஆதரவாகத் தாங்கி, படுக்கை விரித்து, கிடத்தினான்.