உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

183

மன்னன் பெரும்பொருள் அல்லது அணிமணி இருக்குமென்று ஆவலுடன் அதைத் திறந்து பார்த்தான். ஆனால், அதில் பாதி எரிந்து போன ஒரு மெழுகுவர்த்தியும் புரியாத ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு தாளுந்தாம் இருந்தன. இதனைக் கண்டு ஏமாற்றமடைந்து மன்னன், இனி வழக்கினால் பயனில்லை என்று கண்டு, பெரிகிலை விடுதலை செய்தான். சந்தனப் பெட்டியையும் அவன் மீதே வீசி எறிந்துவிட்டான்.

பெரிகில் இப்போது உண்மையிலேயே தன் இரக்கச் சயலுக்காக வருத்தப்பட்டான். அவன் மனைவி அவன் மடமையைச் சுட்டி இடித்துக் காட்டிப் பின்னும் மிகுதியாகக் கொக்கரித்தாள். ஆனால், உள்ளூர இருவரும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று கருதி அமைதியடைந்

தார்கள்.

சந்தனப்பெட்டி - பெரிகிலின் மனத்தில் மட்டும் தான் செய்த நற்செயல் தனக்கு இவ்வளவு தொல்லை தந்ததே என்ற எண்ணம் இருந்து அறுத்துக் கொண்டிருந்தது. ஆண்டியின் முகத்தில் படர்ந்த இறுதிக் கனிவை நினைக்குந்தொறும், தன் செயல் எப்படியும் தீங்கு தராது என்று அவன் ஆறுல் பெறுவான். அத்தகைய தருணங்களில் ஒருநாள் அவன் நினைவுத் திரையில் சந்தனப்பெட்டி நிழலாடிற்று. அதை ஒரு பெரிய பரிசைத் தருவது போலல்லவா தந்தான் ஆண்டி! அவன் ஆண்டியேயானாலும், செப்புக்காசுகூடப் பெறாத வெறுந்தாளையா தருவான் என்று அவன் எண்ணம் உருண்டோடிற்று.

“தாளில் எழுதப்பட்ட எழுத்துக்களில்தான் ஏதோ இருக்க வேண்டும்!" என்று அவன் உள் மனம் கூறிற்று.

66

“அஃது என்ன மொழி என்று தெரியவில்லை. மூர் மரபினர் இன மொழியாகிய அரபு மொழியாகத்தான் இருக்க வேண்டும். அம்மரபினரைத் தேடிச் சென்று கேட்போம்" என்று அவன் எழுந்தான்.

அடுத்த நாள் சட்டைப் பையில் அந்தத் தாளைச் செருகிக் கொண்டு பெரிகில் வெளியேறினான். தண்ணீர்விற்கும் தன் வாடிக்கைக்காரரான மூர்மரபுக்காரர் ஒருவர் கடையில் இறங்கி அதைக் காட்டினான். கடைக்காரன் அதைக் கூர்ந்து