உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

185

தந்திருக்கவேண்டும்." இவ்வெண்ணங்கள் அவன் உள்ளத்தில் அலையாடின. அடுத்து அவன் தான் அணிமையில் செய்த

சயலை அவன் எண்ணினான். "இந்தப் பெரிய இரகசியத்தை நாம் சிறிதும் கருத்தில்லாமல் இன்னொருவனிடம் விட்டு வந்துவிட்டோமே. அந்தக் கடைக்காரன் நம்மிடம் அதை முழுதும் வாசித்து ஏன் கூற வேண்டும்? அவனே சென்று எடுத்துக் கொள்ளலாமல்லவா? என்று எண்ணியபோது அவன் புறமனம் அவனை மீண்டும் சுட்டது.

66

அடுத்த நாள், அவன் கடைக்காரனைச் சென்று கண்டான். கடைக்காரன் தான் வாசித்தறிந்ததை முற்றிலும் விளங்கக் கூறினான். 'அன்பனே! நீ நல்லவன். ஆனால் மிகவும் அவசரப்பட்டு விடுகிறாய். உன் கையில் கிடைத்தது கிட்டத்தட்ட ஒரு புதையலேதான். நீ அதன் அருமை அறியாதவன் என்பதில் ஐயமில்லை. இல்லையென்றால், அதை என்னிடம் விட்டுவிட்டுப் போயிருக்க மாட்டாய்!” என்றான்.

தான் எண்ணியதை அவனும் எண்ணியது கண்டு பெரிகில் வியப்படைந்தான்.

66

உண்மைதான்; ஆனால், அதன் அருமை அறிந்த நீ இப்போது என்னை ஏமாற்ற எண்ணியதாகத் தெரியவில்லையே!” என்றான்.

கடைக்காரன் முகத்தில் பெருமித ஒளி ஒன்று பரந்தது. “அன்பனே! உன்னை நான் நன்கு அறிவேன்; நீ வேறு இனம் தான். நான் வேறு இனம் தான்; நீ வேறு மதம், நான் வேறு மதம்; ஆனால் எல்லா இனங்களையும் மதங்களையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். நீ மத வேறுபாடு, இன வேறுபாடு கடந்த நல்லவன் என்பதை நான் அறிவேன். நீ அன்று கூறிய சந்தனப்பெட்டியின் கதை என்னை உருக்கிவிட்டது. என் குலத்தான் ஒருவனுக்கு நீ செய்த மறக்க முடியாத நன்மைக்கு அவன் செய்த நன்றி இது. இஃது உனக்கே உரியது. இதில் நான் குறுக்கிட்டால், நான் இனத் துரோகி மட்டுமல்ல; மனித

னத்துரோகி; ஆண்டவனுக்குத் துரோகி ஆவேன். இதன் அருமை அறியாத உனக்கு இதன் அருமை காட்டி உனக்கு நன்மை செய்துவிட்டால், ஆண்டவன் திருமுன்னில் செல்லும்போது