188
அப்பாத்துரையம் 36
—
பெரிகிலின் தலைப்பாகை மட்டும் அடைபட்ட கதவால் தள்ளப்பட்டு, குகைக்குள் சிக்கிவிட்டது!
தாம் தப்பி வந்துவிட்டது பற்றி அவர்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர். விளக்கு வகையில் இனி முன்னெச்சரிக்கை யாயிருக்க வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்துகொண்டனர்.
நகருக்குள் நுழையுமுன் கடைக்காரன் பெரிகிலுக்குப் பல அறிவுரைகள் கூறினான். “தம்பி, நீ நல்லவன். ஆனால் நீ எச்சரிக்கையா யிருக்கவேண்டும். நாம் திடீரென்று பணக்காரராய் விட்டதாகக் காட்டிக் கொள்ளப்படாது. மன்னன் பேராசைக் காரன். ஊரோ பொல்லாதது. மேலும் இந்தச் செய்தி ஊருக்குத் தெரியாமலிருக்க வேண்டும். நீ உன் மனைவியிடம் இதைக் கூறினால்கூட, எல்லாம் கெட்டுவிடும். விழிப்பாயிரு” என்று எச்சரித்தான்.பெரிகிலும் உறுதி கூறிவிட்டுத தனியே வீட்டிற்குள் சந்தடியின்றி நுழைந்து படுத்துக் கொண்டான்.
விரைவில்
பருஞ்
பெரிகிலும் கடைக்காரனும் செல்வராயினர். அவர்கள் நட்பும் வளர்ந்தது. அவர்களிடம் பலர் பொறாமை கொண்டனர். அவர்கள் விரைந்து செல்வரானது பற்றிப் பலர் வியப்படைந்தனர். ஆனால், எவரும் இரகசியத்தை உணரவுமில்லை; மலைக்கவுமில்லை; கடைக்காரன் அவன் தொழிலாலும் பெரிகில் தன் உழைப்பாலும் முன் வந்ததாக எவரும் நம்ப முடிந்தது. கடைக்காரன் முன்பே பெரிகிலுக்கு நல்ல வாடிக்கைக் காரணாதலால் அவர்கள் நட்பும் வியப்புக்கு இடம் தரவில்லை.
பெண்புத்தி-ஆனால் உழைப்பின் பயனையே ஊதாரித்தன மாகச் செலவிட்ட பெரிகிலின் மனைவி இப்போது நினைத்த ஆடையணிகளை யெல்லாம் வாங்கத் தலைப்பட்டாள். கேட்டதையெல்லாம் அவன் சிறிது கண்டித்தபின் தருவது கண்டு, அவளே வியப்படைந்து அவன் இரகசியத்தைத் துளைக்கத் தொடங்கினாள்.
"பெரிகில், நீ எங்கிருந்து இத்தனை பணமும் கொண்டு வருகிறாய்? நீ முன் ஆண்டிப்பயல்களுடன் உறவாடிஎவ்வளவோ