உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

-.

அப்பாத்துரையம் - 36

ஆனால், நாய்வாலை நிமிர்க்க யாரால் முடியும்? அவள் பண ஆசை, பகட்டாரவார ஆசை, சமூக ஆதிக்க ஆசை ஆகிய யாவும் அவள் உடலின் ஒவ்வோர் அணுவையும் துளைத்தரித்தன. அவளால் பெரிகிலும் அவன் நண்பனும் நடித்த நடிப்புக் கோட்டைக்குள் அடங்கியிருக்க முடியவில்லை.

அவள், தான் எண்ணப்படித்த அளவும் பொன் காசுகளை எண்ணுவாள்; அப்படி எண்ணி எண்ணிச் சேர்ந்தவைகளை எண்ணிப் பூரிப்பாள்; அரசி இளவரசியர் அணியக்கூசும் அணிமணிகளில் தன்னை ஒப்பனை செய்து கண்ணாடிமுன் நின்று தன் அழகில் தானே சொக்குவாள்; ஆடுவாள், பாடுவாள்.

தன்னையொத்த பிறரிடம் தன் செல்வத்தைக் காட்ட அவள் துடித்தாள். ஆனால், பெரிகில் எதையும் வெளியில் காட்டிக் கொள்ள கூடாதென்று பன்முறை எச்சரித்திருந்தான். இதனால் அவள் முழு ஆட்டமும் வீட்டுக்குள்ளேயே ஆட வேண்டியதாயிற்று. என்றாலும் வெளியில் அவள் பிறரிடம்- சிறப்பாக மற்றப் பெண்களிடம் - முன் போலப் பேசிப் பழக முடியவில்லை. புழுப் பூச்சிகளிடையே பறவைகள் பறப்பது போலப் பறந்தாள். அவள் நடையுடைகள் ஊரெங்கும் பேச்சாயிற்று.

னான்.

பொறாமைப் பேய் - அம்பட்டன் பெருகுவோவுக்குப் பெரிகில் என்றால் பிடிப்பதில்லை. முன்தான் அவனை மாட்டி வைத்த பொறியினின்றும் அவன் தப்பிவிட்ட போது, அவன் பெரிகிலால் தனக்கு அவமதிப்பு நேர்ந்ததாகக் கருதினா இப்போது அவன் செல்வனானதும் வெறுப்புப் பன்மடங் காயிற்று. ஆகவே, பெரிகில் மனவிையின் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிக் கேள்வியுற்றதே அவன் வழக்கமான கற்பனை ஊகம் வேலை செய்தது. பெரிகிலை மீண்டும் சிக்க வைக்க, அவன் இரகசியம் ஏதேனும் இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனிடம் எழுந்தது.

அவன் பெரிகிலின் போக்குவரத்தை ஒற்றாடினான். அவன் வீட்டினருகே அடிக்கடி சுற்றி நோட்டமிட்டான். அத்துடன் அவன் கடை பெரிகிலின் வீட்டுக்கு எதிர்ப்புறம்தான் இருந்தது. அதன் வாயிலுக்கு எதிராகப் பெரிகில் வீட்டுப் பலகணி ஒன்று