உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

அப்பாத்துரையம் - 36

பண ஆசை கொண்ட தன் மனைவியைத் தான் நம்ப நேர்ந்ததற்காகப் பெரிகில் வருந்தினான்.

சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி - கடைக்கார நண்பன் மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. அவன் தன்னையும் தன் அப்பாவி நண்பனையும் காப்பாற்ற ஒரு சூழ்ச்சித் திட்டம் செய்து

காண்டான்.

66

"அரசே! எங்கள் செல்வம் முழுதும் உங்களுடையது தான். உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்க நாங்கள் தயங்கவில்லை. சிறையில் தங்கள் விருந்தாளியாக இருப்பதிலும் மகிழ்ச்சியே. ஆனால் இவ்வளவும் உங்களுக்குச் செய்தால் போதாது. இன்னும் எவ்வளவோ பணம் இருக்கும் இரகசியக் குகையைச் சிறை செல்லுமுன் தங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். உலகத்தின் செல்வ முழுதும் அதற்கு ஈடில்லை. அதை நீங்கள் அனுபவிக்க வேண்டும்” என்றான்.

மன்னன் உள்ளத்தில் பேராசைத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அவன் “சரி, அப்படியே செய்" என்றான்.

"அரசே! இந்த இரகசியத்தை நீங்கள் மட்டும் அறிய வேண்டும். பெட்ரூகோவையும் மற்ற எல்லோரையும் அனுப்பி விடுங்கள்” என்றான்.

எல்லாரும் வெளியே சென்றனர். பெட்ரூகோ காரியம் போகும் போக்குப் பிடிக்காவிட்டாலும் வேறு வழி காணாமல் நண்பர் பக்கம் திரும்பிக் கறுவிக் கொண்டே சென்றான்.

பெரிகில் ஒன்றும் தெரியாமல் விழித்தான்!

விளக்கணைவதால் ஏற்படும் செய்தி தவிர மற்ற எல்லாவற்றையும் கடைக்காரன் மன்னனுக்குச் சொல்லி நள்ளிரவில் ஏழாம் கோபுரத்தண்டை செல்ல ஏற்பாடு செய்தான். தனியே இருக்கும் சமயத்தில் பெரிகிலிடம் தன் திட்டத்தையும் கூறி எச்சரித்தான்.

அன்று மூவரும் பாலைவனத்தின் வழியே சென்றனர். மந்திரத்தின் உதவியாலும், மெழுகுவர்த்தியின் உதவியாலும் மூவரும் குகைக்குள் புகுந்தனர். வெளியே மன்னன் கழுதைகள் மூன்று காத்திருந்தன. முதலிரு கழுதைகளும் கொள்ளும் அளவு