(202) ||_
அப்பாத்துரையம் - 36
காரணமாயிருந்தது குறளிக் கசம்தான். கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைதியாகத் தூங்கும் ஒரு பாறையினருகே அது அமைதிக் காலங்களில் ஒரு சிறு தெப்பக்குளமாகக் கிடந்தது. ஆனால் புயல் காலத்தில் அதன் சிறிய பரப்புக்குள் ஏழு கடல்கள் கொந்தளித்துக் குமுறிக் கொம்மாளம் அடித்தன. அதன் உள்ளிடம் கடலின் ஆழத்துடனும் பாறையின் அடியிலுள்ள நிலக்குகைகளுடனும் தொர்புடைய தாயிருந்தது. அதன் ஆழமோ உள்வளைவு குடைவுகளோ சொல்லித் தொலையாது. மக்கள் அதைக் குறளிக்கவசம் என்று கூறியதில் வியப்பில்லை. ஏனெனில் புயற்காலத்தில் மீன்கள்கூட அதன் பக்கம் வர அஞ்சும்! ஆழ்கடல் நண்டுகள் கூட அதன் அருகே உள்ள பாறைகளில் தங்குவதில்லை!
குறளிக்கசத்தின் அருகிலுள்ள தூங்கும் பாறையில் மலாகி கூடக் கால் வைத்ததே கிடையாது. அதன்மீது அச்சமின்றி நடமாடிய ஒரே உயிரினம் மாலி மட்டுமே! அமைதிக் காலத்தில் கடலில் நீந்தியும் அந்தக் கசத்தில் முக்குளித்தும் அவள் அதன் சுற்றுப்புறங்களில் வளைவு நெளிவுகளையும் அதன் உட்புறக்குடைவுமுடைவுகளையும் நன்கறிந்திருந்தாள். அத்துடன் நீர்ச்சுழிகளையும் குமுறல்களையும் அவள் எதிர்த்துப் போராடுவதில்லை. அவற்றைத் தன் தோழர்களாக்கி வேண்டிய திசையில் செல்ல அவற்றைப் பயன்படுத்திக் கொள்வாள்!
கடல் இன்னதென்றறியாத வேளாண் செல்வர் வீட்டுப் பிள்ளையாகிய ஃபார்ட்டி என்றேனும் ஒருநாள் குறளிக்கசத்தின் எளிமை அழகிலும், தூங்கும் பாறையின் கவர்ச்சியிலும், புயற்காலங்களில் கசத்தில் புரளும் பாசி வளத்தின் அளவிலும் சிக்காது இருக்கமாட்டான் என்று மாலி கருதினாள். அவள் கருதியது தவறாகவும் இல்லை. அவன் அடிக்கடி அக்கசத்தைக் கண்டேங்குவதையும் தூங்கும் பாறையில் நின்று பாசித்திரளை வாரக் கை ஏந்துவதையும் அவள் அடிக்கடி பார்த்திருந்தாள்.
ஒருநாள் மாலை அமைதியிடையே மெல்லக் காற்று வீசத் தொடங்கிற்று. காற்றுப் புயலாகத் தோற்றவில்லை. கடலில் அலைகளும் எழவில்லை. ஆனால் கடல் மலாகியின் கடலை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.கடற்பாசிகள் கடலுக்குள் பாயும் ஆறுகள் போல நாற்புறமிருந்தும் பாய்ந்து வந்து குறளிக்கசத்துக்குள் சுருண்டு தூங்கும் பாறைமீது