உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(204

அப்பாத்துரையம் - 36

ஆனால் நெஞ்சு படபடக்க நேரமில்லை. அதற்குள் குறளிக்கசம் படபடத்தது. அலை எழாமலே கடல் புளித்த தோசைமாவைப்போலப் பொங்கித் தூங்கும் பாறையின்

கழுத்தளவு உயர்ந்துவிட்டது.

“வந்துவிடு, ஃபார்ட்டி, வந்துவிடு” என்று கூவினாள் மாலி.

அவன் வரத்தான் முயன்றான். ஆனால், அவன் கையின் பேராசை வளைகோலில் சிக்கிய பாசியுடன் வர முயன்றது. குளறிக்கசம் பாசியைச் சுழற்றி உள்ளிழுத்தது. பாசி கையை வளைத்திழுத்தது. அவன் கால் சறுக்கிற்று. அவன் குறளிக்கசத்தின் குமுறலுடன் குமுறி அதன் நீரில் கவிழ்ந்து சென்றதும் மேல் வந்ததும் அலறினான்.

மாலியின் அகமும் ஆகமும் பற்றி எரிந்தன. ஆனால் அவள் அமைதி நிலையை விடவில்லை. அவன் நீரில் மேலெழும் சமயம் பார்த்துத் தன் வளைகோலை அருகில் நீட்டி "இதைப் பிடித்துக்கொள், ஃபார்ட்டி!” என்றாள்.

கிலியும் கலக்கமும் அதிர்ச்சியும் ஃபார்ட்டியை அப்போதே அரையுயிர் ஆக்கியிருந்தன. ஆனால் அவன் கைகள் மட்டும் அந்த வளைகோலைச் சாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டன. அத்துடன் அவன் உணர்வு முற்றிலும் இழந்தான். ஆயினும் நீருடன் அவன் போராடிய போராட்டம் முடிந்தது. நல்ல காலமாக அவனைக் காட்டிலும் நீரின் உணர்ச்சியறிந்து பழகிய மாலியே அப்போராட்டத்தை இப்போது மேற்கொண்டாள். அவளிடம் தோழமை பூண்ட குறளிக்கசம் மெள்ள மெள்ளத் தான் விழுங்க எண்ணிய இரையை அவளிடம் ஒப்படைத்தது.

உடலைக் கரைக்குக் கொண்டுவருவது அவளுக்கு எளிதாயிருந்தது. ஏறிவரும் கடலின் பிடிக்கு எட்டாமல் அதை உயரத்தில் ஏற்றுவது அவளுக்குக் கடினமாயிருந்தது. அவள் பலம் மிகுதியானாலும், பாறையின் வழுக்கலிடையே அவள் அரும்பாடுபடத்தான் வேண்டி வந்தது. ஓரளவு அலையின் பிடிக்கு அப்பால் கொண்டுவந்தபின் அவனை அவள் உணர்வு நிலைக்குக் கொண்டு வர முயன்றாள். அவனுக்கு எத்தகைய பேரிடையூறும் வரவில்லை. ஆனால் தலையடி பட்டுக் குருதி கொட்டிற்று. அதை ஓரளவு அவள் தன் ஈரத்துணி கிழித்துக்