உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216) ||_

அப்பாத்துரையம் - 36

“கிழக்கு நோக்கி மூன்று தடவை தலைவணங்கி இத் தூளை உண்பவன் உண்ணும்போது விரும்பிய எந்தப் பறவை அல்லது விலங்கு வடிவத்தையும் அடைவான். அத்துடன் அவ்வப்பறவை அல்லது விலங்கு மொழியையும் அப்பொடியின் ஆற்றலாலேயே உணர்ந்து அவற்றுடன் உரையாடுவான். அவன் பழைய உருவமடைய விரும்பினால் புத்தகுரு என்ற இறைவன் பெயர் கூறிக் கிழக்கு நோக்கி மூன்று தடவை வணங்க வேண்டும். ஆயினும் விலங்கு அல்லது பறவை வடிவத்திலிருக்கும்போது அவன் எக்காரணங் கொண்டும் சிரித்துவிடக் கூடாது. சிரித்தால் சொல்லவேண்டிய இறைவன் பெயர் மறந்துவிடும். விலங்கு அல்லது பறவை வடிவத்திலேயே இருக்க வேண்டி வரும்” என்று அவன் அப்பாலிமொழி எழுத்துகளைப் படித்துக் கூறினான்.

மன்னன் இது கேட்டு எல்லையிலா உவகை கொண்டான். பாலி மொழியாளன் வாய் நிறையச் சர்க்கரையிட்டுக் கை நிறையப் பொற்காசுகள் கொடுத்தனுப்பினான். அனுப்புமுன் அமைச்சன், "அரசே! சொன்னது சரியா என்று பாராமல் அவனை அனுப்பலாமா?” என்று கேட்டான்.

அரசன்! “ஆகா! அப்படியே செய்தால் போயிற்று. வா! இங்கே வந்து நீயே அதை மெய்ப்பித்துக் காட்டு. எங்கே என் நல்லமைச்சனை ஒரு கறுப்பு நாயாக நான் என் கண் முன்னே காணட்டும்!” என்றான்.

மன்னன் குணமறிந்த அமைச்சன் மறுத்துப் பேசாது தூளை முறைப்படி உட்கொண்டான். மறுகணம் அவன் ஒரு கறுப்பு நாயாகி மன்னனை நோக்கி வால் குழைத்து நின்றான். அந்த உருவத்திலும் அமைச்சன் கண் ஒன்று குருடாகவும் பல் உடைந்தும் இருப்பதைக் கண்ட மன்னன் குலுங்க குலுங்க நகைத்தான். அமைச்சன் மட்டும் வருந்தித் தன்னையடக்கிக் காண்டு சிரிக்காமலிருந்தான். சிரித்தால் திரும்ப அமைச்சனாக முடியாது என்பதை அவன் மறக்கவில்லை. விரைவில் அவன் நாயுருவம் மாற்றி மன்னனுடன் மாயப் பொடியின் உதவியால் பல உருவெடுத்து நாடு சூழ்ந்து வந்து வேடிக்கை பார்த்துக் களித்தனர்.