உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

229

குடியானவன் மனைவி: நாங்கள் புதைத்த இடத்தில்தான். அதன் மேலே புல்கரண் வைத்திருக்கிறோம்.

பணியாட்கள் சென்று புல்கரணைப் பெயர்த்துப் பார்த்தனர். அதில் ஒன்றும் இல்லை.

பண்ணையார் அவளைப்பார்த்து, “நீ ஒரு பைத்தியம். இனி இப்படிப் பித்துப்பிடித்து உளறாதே!" என்றார்.

66

‘எனக்கா பித்து. நான் இத்தனையையும் கண்ணால் கண்டேன். அந்தக் காட்டுமீனும் ஆற்றுமுயலும் மர அப்பமும் எவ்வளவோ சுவையாயிருந்தனவே," என்று கூறிக்கொண்டே, சென்றாள், குடியானவப்பெண்.