உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

231

வீடு வந்து சேர்ந்ததும் அவன் தன் மனைவியிடம் இச்செய்தியைக் கூறினான்.“நீ அந்த மீனிளவரசனிடம் ஒன்றும் கேட்க வில்லையா?” என்று கேட்டாள் மனைவி.

66

இல்லை. என்ன கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டான் அவன். "நமக்கு ஒரு நல்ல சிறிய வீடு வேண்டுமென்று கேள்!" என்றாள்.

று

செய்த நல்லுதவிக்கு விலை கேட்பது என்பது செம்படவனுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவன் கடற்கரை சென்றான். கடல் அப்போது பொன் கலந்த பச்சை நிறமாகப் பளபளத்தது. அவன் கரையிலிருந்தபடியே,

“கடல் இளவரசே,

கவனித் தருள்வாய் அடம் பிடிக்கின்றாள் ஆலிசு என் மனையாள், திடங்கொண் டொருவரம் தேடுவாய் என்றே!"

என்று கூவினான். மீன் உடனே அலைகளை ஒதுக்கிக் கொண்டு அவனை நாடி வந்தது. "அன்பனே! அவள் என்ன வேண்டு மென்கிறாள்?” என்று அது கேட்டது.

“உன்னை விடுதலை செய்யுமுன் உன்னிடம் நான் ஏதாவது கேட்டிருக்க வேண்டுமென்று அவள் கருதுகிறாள். நாங்கள் ஒரு சிறு கோழிக் கூட்டில் அடைபட்டிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு சிங்காரச் சிறுவீடு வேண்டுமென்று விரும்புகிறாள்,” என்றான் செம்படவன்.

“அப்படியே அவளுக்கு கிடைத்துவிட்டது து, வீட்டுக்குப்போ,” என்றது மீன்.

நீ

அவன் திரும்பிச் சென்றபோது கோழிக்கூட்டைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு சிங்காரச் சிறு வீடு இருந்தது. அதன் சிங்காரவாயிலில் நின்று அவன் மனைவி அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.