உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

243

அன்றுமுதல் கணவன் களத்துக்கு ஒழுங்காகச் சென்றான். மனைவி எப்போதும்போல வீட்டுவேலையைக் கவனித்தாள். எத்தனை வேலைகளை அவள் தன்னந்தனியாக இருந்து திட்டமிட்டுச் செய்கிறாள் என்பதைக் கவனித்து அவன் அவள் திறமையை வியந்தான். அவளிடம் அவனுக்கு முன்னைவிட மிகுதி பாசம் ஏற்பட்டது; அவன் முன்கோபமும், பின் என்றும் தலைகாட்டாமல் மறைந்தது.

அந்த ஒருநாள் ஏற்பட்ட நட்டம் பெரிதாயிருந்தது.ஆனால், குடியானவப் பெண்மணியின் திறமையாலும் திருந்திய குடியானவன் பண்பாலும், அந்தப் படிப்பினை அவர்கள் வாழ்க்கையையே முழுதும் செப்பம் செய்யத் தக்கதாயிருந்தது.

மனவிை மட்டும் கணவனைச் சாடைகாட்டிக் குழந்தையிடம், "அப்பா, சாண்பிள்ளை! நீயும் உன் அப்பா ஆண்பிள்ளையும் சேர்ந்து குடும்பம் நடத்துகிறீர்களா," என்பாள். குடியானவன் தன் தவறுகளை எண்ணிச் சிரிப்பான்.