உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. அன்புச் செல்வம்

கிழக்காப்பிரிக்கக் கதை

ஒரு விறகு வெட்டிக்கு ஒரு புதல்வனும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவன் இறக்கும் தறுவாயில் தன் இருபிள்ளை களையும் அழைத்தான். புதல்வியைப் பார்த்து, "அம்மா, என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன; அன்புச் செல்வமும் பொருட் செல்வமும்! உனக் கு வேண்டுமானாலும் தருகிறேன்,” என்றான்.

எது

பெண், “தங்கள் அன்புச் செல்வமே போதும், அப்பா," என்றாள்.

மகனிடம் கேட்டபோது அவன், “பொருட்செல்வமே எனக்கு வேண்டும்," என்றான். அடுத்துச் சில நாட்களில் தாயும் இறக்கும் தறுவாய் அடைந்தாள். அவளும் தன் பிள்ளைகளிடமும் இது போலவே கேட்டாள்.

ரு

தங்கை முன்போலவே அன்புச் செல்வத்தையும் அண்ணன் பொருட் செல்வத்தையும் தனதாக்கிக் கொண்டனர். தாய் தந்தையர் காலமானபின் அண்ணன் அவர்கள் இருவர் செல்வத்தையும் ஒரு சிறு பகுதிகூடத் தங்கைக்கு வைக்கவில்லை. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், “அப்பா, உன் தங்கைக்கு ஏதேனும் தரலாமல்லவா?" என்று கேட்டனர். அவன் “யார் சென்னது, தரலாம் என்று, ஒரு செம்பாலடித்த காசுகூடக் கொடுக்க நேர்மையில்லை. தாய் தந்தையரிருவரிடமும் அவள்தான் செல்வம் வேண்டாம், அன்பே போதும் என்றாளே. அன்பையே அவள் முழுவதும் எடுத்துக் கொண்டு போகட்டும். செல்வம் எதுவும் வேண்டியதில்லை,” என்றான்.

தங்கையினிடம் இப்போது ஒரு சமைக்கும் பானை மட்டுமே மீந்திருந்தது. அத்துடன் தாயிடம் இருந்த சில பூசணி