உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(262)

66

னி

அப்பாத்துரையம் - 36

“ஆம்.நான் என் சீற்றத்தை இனி அடக்கிவைக்க முடியாது. அடக்கி வைக்கவும் போவதில்லை. இதோ நம் ஒப்பந்தப்படி இரண்டாயிரம் வெள்ளி தந்துவிடுகிறேன். நீ திரும்ப இத்திசை வராமல் போய்த்தொலை,” என்றான்.

தம்பி இரண்டாயிரம் வெள்ளியுடன் வீடு திரும்பினான். மூத்தவன் கொடுக்கவேண்டிய ஆயிரம் வெள்ளி போக, ஆயிரம் வெள்ளிக்கொண்டு அவர்கள் தங்கள் பண்ணையைச் சீர்செய்து சிறப்புடன் வாழ்ந்தார்கள்.