உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

287

உயரப்பறந்து, பின் கல்லறைக்கூடந் தேடி இறங்கி இளவரசன் மீதே தங்கிற்று.

“இதையும் ஒத்துக்கொள்ள முடியாது, முக்காலும் மூன்று தடவை முயல்வது துருக்கியர் மரபு,” என்றனர் மரபு பயின்றோர். ஆனால், மூன்றாவது தடவையும் புறா இளவரசனையே தேர்ந்ததனால், அனைவரும் ஒருமனப்பட்டு அவனையே அரசனாக ஏற்றனர்.

புதிய மன்னன் ஆட்சியில் நேர்மையும் அன்பும் நிரம்பியிருந்தது. தொலை அறிவுடைய சட்டதிட்ட நிறுவனங்கள் மூலமாக நாடு வளங் கொழித்தது. புதியவன் என்பதற்காகத் தேர்வை எதிர்த்தவர்கள் எல்லாரும் அவனை வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினர்.நாடு கடந்து அவன்புகழ் நானிலமெங்கும் பரந்தது. அவன் தான் போர் செய்யாததுடன், அயலாரிடையே போர் எழாமலும் காத்தான். அவன் யாரென்று தெரியாத நிலையிலும் அவன் புகழ் அவன் தந்தையின் காதுகளுக்கு எட்டியது. தந்தை இப்புதிய அரசனின் நட்பை விரும்பி அவனிடம் தன் அரசியல் தூதனை அனுப்பினான். புதிய அரசனும் தூதனுக்கு மட்டில்லா மதிப்பளித்து வரவேற்றான். அத்துடன், எதிர் தூதனுப்பினான் தன் விருந்தினராக வருமாறு தந்தைக்கு அழைப்பனுப்பினான்.

பழைய மன்னன் தன்மகனென்று தெரியாமலே மகனின் விருந்தாளியானான்.

நாடெங்கும் மகரதோரணங்கள் தொங்கவிடப்பட்டன. முரசுகள் முழங்கின. குதிரைப்படைகளும் காலாட்படைகளும் தேர்களும் எங்கும் நெருங்கின. பூமாலைகளும் சொல்மாலைகளும் பரிமாறப்பட்டன. பழைய மன்னனுக்கெனத் தனிமாடகூடங்கள், புடையர் குழுவினர்களுக்குத் தனித்தனி மாளிகைகள், விருந்துக் கூடங்கள், அவர்கள் போர்க்குதவும் வாட்படைகள் வைக்க மேடைகள், அவர்கள் பொழுது போக்குக்காகக் கலைஞர், சைவாணர், நாடகக்குழுக்கள் யாவும் திட்டம் செய்யப்பட்டிருந்தன.

தமக்குக்காட்டப்பட்ட மதிப்பையும் வரவேற்பையும் கண்டு பழைய மன்னனும் அவன் அமைச்சர் புடையர்களும் எல்லையிலா மகிழ்ச்சியடைந்தனர். புதிய மன்னனை வாயார