உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

291

அவனறியாமல் அவன் கண்ணிலாடும் ஒளியையே பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் அதே சமயம் அவளறியாமலே அவன் அவள் கண்ணின் நீலநிறத்தில் தன் உள்ளத்தை ஈடுபடுத்திய வண்ணம் இருப்பான். இருவர் உள்ளத்திலுமே இங்ஙனம் ஒருவரை ஒருவர் அறியாமல் பாசப்பயிர் வளர்ந்தது.

தூத்தானகை உள்ளூர ஃஇனேமோவாவை எவ்வளவு

நேசித்தாலும், அதை அவளிடம் சென்று வெளியிடத் துணியவில்லை. மன்னர் இளங்கோக்கள் அவளுக்காக ஏங்கித் தவங்கிடந்தும், அவள் அவர்களை மதியாதிருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே, தன் காதலை அவள் ஒரு பொருட்டாக ஏற்பாள் என்று அவன் கருதவில்லை.

ஃஇனேமோவாவுக்கும் தூத்தானகை பெயர் கேட்ட போதெல்லாம் நெஞ்சம் துடிக்கும். அவனைக் காணும் போதும், அவன் குரல் கேட்கும் போதும், அவள் நாடி நரம்புகள் ஆடிப்பாடும். ஆனால், அவனிடம் தன் காதலைத் தெரிவித்துத் தூதனுப்ப அவளுக்கும் துணிவு வரவில்லை. வலிந்து தன் காதலைத் தெரிவிக்கும் பெண்ணை எந்த ஆடவனும் மதிக்க மாட்டான் என்று அவள் உள்ளம் அவளை அடிக்கடி அச்சுறுத்திற்று.

நாட்களும் வாரங்களும் இங்ஙனம் கழிந்தன. மயோரியர் இனவிழாக் காலமும் விரைந்தோடி முடிவை அணுகிற்று. தூத்தானகை இப்போது துணிந்து தன் காதலை ஃஇனேமோவா வுக்குத் தெரிவிக்கும்படி ஒரு தூதனை அனுப்பினான்

தூதன் வந்து செய்தி தெரிவித்தவுடன் ஃஇனோமோவா தன்னை அடக்க முடியாமல் துள்ளிக் குதித்தாள். அகோகோ- ஓகோகோ, என் காதல் ஒருதலைக் காதலல்ல. என் காதலரும் என்னைக் காதலிக்கிறார். நானும் அவரைக் காதலிக்கிறேன்,” என்று அவள் பாடினாள்.

தூத்தானகைக்கு தன் காதல் ஒருதலைக் காதலல்ல என்பது இப்போது விளங்கிற்று. அவன், ஃஇனேமோவாவுக்கு அடிக்கடி காதல் தூது அனுப்பினான். அடிக்கடி கடிதங்கள் எழுதினான். பல தடவை அவர்கள் சந்தித்து அளவளாவினர்.