(300 ||
66
அப்பாத்துரையம் - 36
'அடே! நீ ஆண்பிள்ளைதானா? இப்படி ஒளிந் தோடுகிறாய்?" என்றான்.
அவள் ஒளிவது மாதிரி பாசாங்கு செய்தாள். அவள் கைகளில் ஒன்றைப் பற்றி அவன் இழுத்தான்.
66
'நீ ஆண் பிள்ளைதானா? ஒரு பெண் பிள்ளையை இப்படித் தண்ணீருக்குள் இறங்கி வேட்டையாட!” என்றாள் அவள்.
அந்தக் குரல் பெண்குரல் என்பதை அவன் அப்போதுதான் கவனித்தான்.
66
“ஆ பெண்ணா! நீ யார்? ஏன் இங்கே வந்தாய்?” என்றான். “பெண் எதற்காக இப்படி வருவாள்?" என்ற அவள் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டான்.
66
66
"ஆ! அது யார்? ஃஇனேமோவா?" என்றான்.
“ஆம்.நான்தான்,” என்று கூறி அவள் நாணிக் கோணினாள்.
நடந்தது இன்னதென்று தெரியாமல் அவன் விழித்தான். பின்னர், "ஃஇனேமோவா! நீ இப்படி ஒளிப்பானேன்? என் வீட்டுக்கு வரலாமே!" என்றான்.
"நான் நீந்திவந்தேன். அதனால் உடையை...." அவன், தன் மேலாடையை அவள் பக்கம் வீசினான்.
அதை உடுத்துக்கொண்டு அவள் தண்ணீரை விட்டு வெளியே வந்தாள். காதலி காதலன் விருந்தாளியானாள்.
தந்தையின் ஆதரவில், மயோரியர் அனைவரின் ஆர்வமிக்க ஆடல் பாடல்களிடையே ஃஇனேமோவாவுக்கும் தூத்தா னகைக்கும் திருமணம் நடைபெற்றது.