உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அப்பாத்துரையம் - 36

அவனை வளர்க்க அரும்பாடுபட்ட செவிலியர்களுக்கும் பணியாட்களுக்கும் அவன் வளர்ச்சியுடன் தொந்தரவும் தொல்லையும்தான் வளர்ந்து வந்தன. அவர்கள் சற்று விலகினால் அல்லது கண் மறைந்திருந்தால் கண்ணாடிக் கோப்பைகள் உடைபடும். கிண்ணத்தில் இருந்த பால் தரையில் ஊற்றி விடப்படும். சிலசமயம் விளக்குகள் உடைந்து அவனுக்கே இடுக்கண் விளைவதுண்டு.

படையின் கட்டுப்பாடுகளுக்குப் பொறுப்புத் தாங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமையான தூண்களுள் ஒன்றைச் சரிவர நிலைநிறுத்தி வந்த கர்னல் வில்லியம்ஸுக்கு அப்பெரிய வேலையைவிட இச்சிறு குரங்குக் குட்டியைக் கட்டுப்படுத்தும் வேலை அருமையாகப் போயிற்று. குரங்கு சற்று வளரட்டும். என் பட்டைகளின் சட்டங்களால் அவனை இறுக்கி, பணிய வைக்கிறேன்; என்று அவன் கூறிக் கொண்டான்.

வீ வில்லி விங்கி ஆறு ஆண்டு முதிர்ந்து தாய் மடியிலிருந்து தந்தை தோளுக்குத் தாவும் பருவம் ஆயிற்று. கர்னலின் ஆட்சியும் தொடங்கிற்று. இரு என்றால் இருக்க வேண்டும்; இல்லா விட்டால் உதை, வாயை மூடு என்றால் மூடவேண்டும், இல்லையாயின் காதில் ஒரு முறுக்கு.

கர்னலின் அடக்குமுறை

பாறையை உடைக்கும் கடப்பாரை, பஞ்சுப் பொதியை என்ன செய்யும்? போலீசாரைப் பணிய வைக்கும் கர்னலின் ஆட்சிமுறை தம் சிறிய "குரங்குக் குட்டி”யிடம் செல்லவில்லை. அவர் கண் மறைந்ததே, அதுவரை அடங்கியிருந்த அவன் குறும்பெல்லாம் அணை கடந்த வெள்ளம்போல் பீறிட்டு வெளிவரும். செவிலியர்கள், பின் தங்கள் ஆட்சி முறையைத் தொடங்குவார்கள்.

நட்பு, பகை, பிரிவு, ஒறுப்பு என்ற நால்வகை ஆட்சி முறைகளைத் தலைகீழாய்த் திருப்பி, பின் பணியாற்றினார் கர்னல். படையில் ஆட்சி செலுத்தும் ஒறுப்பு பயன்படாமல் போகவே, பிரிவு முறையில் நல்ல பிள்ளை கெட்ட பிள்ளை என்ற பாகுபாட்டைத் தொடங்கினார். பின் திட்டினார். இறுதியில் "நல்ல பிள்ளையாக நடந்தால் உடுப்பில் நல்ல