உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

||

காட்டில் நளினி

அப்பாத்துரையம் - 36

இவர்கள் இங்ஙனம் காட்டில் வாழ்ந்து வருகையில் நாட்டில் நளினி, கோதண்டனின் தொந்தரவையும் இளவரசன் விசயனின் வற்புறுத்தலையும் பொறுக்க முடியாமல் தந்தையையும் உடனழைத்துக் கொண்டு காட்டிற்கே ஓடி வந்து விட்டாள். முதியவனாகிய விசயப் பெருந்தகை தன் சொத்துக்களை இழந்த பின் தன் புதல்வியை நாடுகடத்தப்பட்ட ஒருவனுக்குக் கொடுப்பதைவிடச் செல்வனும் புதிய அரசியலில் செல்வாக்கு உடையவனுமான கோதண்டனுக்கே கொடுத்து விடலாம் என உள்ளூற நினைத்திருந்தான். அதற்கேற்பத் தன் புதல்வியை யாரும் அறியாதிருக்கும்படி அவளுக்கு ஆணுடை யணிவித்தான். அவ்வுடை செந்நிற முடையதாயிருந்ததால் அவளை அனைவரும் செவ்வீரன் என்றே அழைத்தனர்.

அவளுடைய மாற்றுருவத்தில் அவளை இன்னாரென்று ஆகவமல்லனாகிய மல்லர்கோ அறிந்து கொண்டான். அவளும் அவனை அறிந்து கொண்டதுடன் அவனுடன் பெரிதும் அன்பு பாராட்டினாள். ஆயினும், அவனைத் தன்தந்தைக்கு எதிராக மணக்க மாட்டேன் என்றும், மன்னர் அரிகேசரி வருமளவும் யாரையும் மணப்பதில்லை என்றும் பிடிவாதம் செய்தாள்.

தன் காதல் நிறைவு பெறாதோ என்று கவலை கொண்டு காட்டில் கண்ணயர்ந்து கிடந்த மல்லர்கோவின் கனவில் வனதெய்வங்கள் வந்து “நீயே உன் காதலியைப் பெறுவாய்; அஞ்சிச் சோர்வடையாதே!” என்று கூறின. அதை உணர்ந்து அவன் மனந்தேறினான்.

பின்னர் அவன் ஒருநாள் விசயப் பெருந்தகை கூறியதாக ஒரு தூதனை உவணகிரி மடத் தலைவனிடம் அனுப்பி அவன் பணத்தைப் பெற்றுப் பத்திரத்தை வாங்கிச் செல்லும்படிச் சொல்லியனுப்பினான்.

எதிர்பாராதது

மற்றொருநாள் மல்லர்கோ தனியே இருக்கையில் அவனைத் தேடிக் கொண்டு இளவரசன் விசயனும் கோதண்டனும் இன்னொரு போர்வீரனும் வந்தனர். அவர்கள்