உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அப்பாத்துரையம் - 36

பொன்னை எடுத்து வைத்தான். வட்டிப் பாக்கியாக மேலும் நானூறு பொன் உண்டு என்று மடத்தலைவன் கூறவே, மேலும் நானூறு பொன் கொடுத்தான். மடத் தலைவன் பேரவாக் கொண்டு “நான் தவறிக் கூறிவிட்டேன். வட்டி உண்மையில் ஐந்நூறு பொன் ஆகும்," என்றான். மல்லர்கோ அட்டியின்றி இன்னும் நூறு பொன் வைத்தான். அதன் பின்னும் பத்திரத்தைத் திருப்பிக் கொடுக்காமல் "பத்திரப்படி கொடுக்க வேண்டிய தவணையான ஒரு மணி நேர அளவு கடந்து விட்டது. மேலும் மீட்டுக் கொள்ளப் படுவதாகச் சொன்ன இடம் இஃதன்று; உவணகிரி மடமேயாகும், என்று கூறி விதண்டாவிவாதமிட்டான்.

இளவரசன் சூழ்ச்சி

மல்லர்கோ சீற்றங்கொண்டு அவர்களைத் தாக்கப் புகுமளவில், முன்னமேயே மடத்தலைவன் மூலம் உளவறிந்த ளவரசன் விசயனும் அவன் படைஞரும் வந்து அனைவரையும் வளைத்துக் கொண்டனர். மல்லர்கோவும் அவன் வீரரும் காட்டுப் பகுதிகளை நன்கறிந்தவராதலால் ஓடி ஒளிந்து கொண்டனர். செவ்வீரன் உருவில் இருந்த நளினி மட்டும் ஓட முடியாது நின்றாள். அவனை அடையாளம் அறிந்து விசயனும் கோதண்டனும் அவளைக் கொண்டு செல்ல ஆய்த்தமாயினர்.

அரிகேசரி வெளிப்படல்

அச்சமயம் புதிய வீரன் முன்வந்து, "யாரும் ஓரடி கூட எடுத்து வைக்கக் கூடாது. நானே அரிகேசரி அரசன். இவ்வீரமக்களின் பாதுகாப்புடன் ஆட்சியையும் ஏற்றுக் கொண்டேன்,” என்றான்.

காண்டதும்;

அவனே அரிகேசரி என்று கண்டு பேரவாவால் தூண்டப்பட்ட பொய்யானாகிய விசயன் “இவன் அரிகேசரியல்லன்; மன்னர் பேர் சொல்லி நம்மை ஏய்க்க வந்த போலிப் பகைவன். இவனைச் சிறையிடுக," எனக் கட்டளை

யிட்டான்.

ஆனால் மல்லர்கோவும் அவன் வீரரும் வந்து அரிகேசரியை மீட்டனர். விசயன் ஓடிவிட்டான். கோதண்டனும் காட்டரசர் கையில் சிறைப்பட்டான்.