உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

57

போக்கையும் லான்ஸிலட், கினிவீயர் ஆகியவர்களையும் பிரிட்டனின் எதிர்காலத்தையும்கூட மிகுதியும் மாற்றும் தீவினையாக மாறிற்று. கினிவீயரின் பார்வையில் ஆர்தர் வீரமும் பெருந்தன்மையும் ஒன்றம் பெரிதாகத் தோன்றவில்லை. லான்ஸிலட்டே அவள் உள்ளங் குடிகொண்ட உரவோன் ஆயினான். அவர்களிருவரும் யார் சார்பில் கூடினோம் என்பதை மறந்து ஒருவருடன் ஒருவர் நட்புப் பூண்டு விட்டனர். ஆனால் அவர்கள் நட்பு மணவினையாக மாறமுடியா தென்பதை இருவரும் உணர்ந்தனர். லான்ஸிலட் தன் தலைவனுக்கு மாறாக நடக்கத் துணியவில்லை. கினிவீயரும் ஆர்தருக்குத் தன்னை மணஞ்செய்து கொடுக்கத் தயங்கிய தன் தந்தை லான்ஸிலட்டுக்குத் தன்னை மணஞ்செய்விக்க ஒருப்படான் என்பதை அறிந்தாள். ஆகவே லான்ஸிலட்டின் கடமையுணர்ச்சி ஒருபுறம்; ஆர்தரை மணந்தால், லான்ஸிலட் இருக்குமிடத்தில் அவன் மீதே உரிமை பெற்ற அரசியாக ஆட்சி புரியலாம் என்ற கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக, ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. அத்துடன் லான்ஸிலட் கினிவீயரை யன்றி வேறு எப்பெண்ணையும் விரும்புவதில்லை என்றும், கினிவீயர் ஆர்தரை மணந்து கொள்வதனால் தான் மணமேயில்லாதிருந்து விடுவதாகவும் கூறவே, கினிவீயரின் தன்னல வேட்கை நிறைவு பெற்றது. தான் ஈடுபட்ட இத்தன்ன வாழ்க்கை ஆர்தரை வஞ்சித்ததாகுமே என்பதை இரண்டகமும் சூழ்ச்சியும் படைத்த அவனுள்ளம் உணரவில்லை.

ஆர்தர் கினிவீயரை, வரவேற்றுக் காமிலம் நகரெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்று அரண்மனை புகுந்தார். அவ்இளவேனில் பருவத்தில் நறுமலர்களிடையேயும், இனிய பறவைகளின் இசையினிடையேயும் ஆர்தர், கினிவீயரின் அழகையும் அவள் இனிய குரலையுமே உணர்ந்தார். ஆனால் அதே சமயம் கினிவீயர், அவற்றிடையே லான்ஸிலட் வீர உருவையும், லான்ஸிலட் வீரக் கழலோசையையு மே உணர்ந்தாள்.

காமிலட் மக்கள் ஆரவாரத்திடையேயும் வட்ட மேடை வீரர் கேளிக்கைப் போட்டிகளிடையேயும் ஆர்தர் கினிவீயரை மணந்து அவளை அரசியாகத் தன் அரசிருக்கையில் கொண்டார்.